"ஹர்திக் பாண்டியா வாய்ப்பு அவ்ளோ தான் போல.." முன்னாள் வீரர் கருத்தால் எழுந்த பரபரப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர், சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி 20 தொடரில், இந்திய அணி மோதவுள்ளது.

Advertising
>
Advertising

வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான இரண்டு தொடர்களையும் வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள இந்திய அணி, இலங்கை தொடரையும் கைப்பற்றும் நோக்கில் உள்ளது.

ரோஹித் ஷர்மா தலைமையில், இந்திய அணி சிறப்பாக  செயல்பட்டு வரும் நிலையில், சில இளம் வீரர்களும் அசத்தலாக ஆடி வருகின்றனர்.

வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டம் ஆடியதன் மூலம், இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர். ஆல் ரவுண்டரான இவருக்கு, தென்னாப்பிரிக்க தொடரில் பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த முடிவு, பல முன்னாள் வீரர்களின் விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதே போல, வெங்கடேஷின் பேட்டிங்கும் பெரிய அளவில் எடுபடவில்லை.

பட்டையைக் கிளப்பிய இளம் வீரர்

தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் மீண்டும் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்திருந்த நிலையில், அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், பந்து வீச்சில் அதிக ஓவர்கள் வீசவில்லை என்றாலும், குறைந்த ஓவர்கள் மட்டுமே பந்து வீசி, சில முக்கிய விக்கெட்டுகளையும் அள்ளியிருந்தார். இதனால், இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹர்திக் பாண்டியா

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர், வெங்கடேஷ் ஐயர் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 'இந்த சமயத்தில், ஹர்திக் பாண்டியாவை விட, வெங்கடேஷ் தான் ஒரு படி மேலே இருக்கிறார். ஏனென்றால், ஹர்திக் பாண்டியா மீண்டும் பந்து வீசுவாரா?, அவரது உடற்தகுதி எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஐபிஎல் தொடரை வைத்து தான், ஹர்திக் பாண்டியா உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பது வாய்ப்பாக அமையும்.

வாசிம் ஜாஃபர் ஆச்சரியம்

ஆனால், தற்போதுள்ள சூழலில் வெங்கடேஷ் ஐயர் தான், ஹர்திக் பாண்டியாவை விட முன்னிலையில் உள்ளார். ஆறாவது வீரராக வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் இறங்கி ஆடியதை பார்க்கவே, ஆச்சரியமாக இருந்தது. அவரை தொடக்க வீரராக பார்த்துள்ளோம். ஆனால், இப்போது ஆறாவது இடத்திலும் களமிறங்கி, தன்னை ஒரு பினிஷராக வெங்கடேஷ் மாற்றிக் கொண்டது, மிகவும் சிறப்பான ஒன்று. பவுலிங் மூலமும் சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். உலக கோப்பை அணியில் இடம்பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பார்' என வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

காயத்தால் அவதி

காயம் காரணமாக, சர்வ்தேச போட்டிகளில் தொடர்ந்து ஆடாமல் இருந்து வரும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி, பேட்டிங் மட்டுமே செய்திருந்தார். மிக குறைந்த ஓவர்கள் மட்டுமே அவர் வீசியதால், கடும் விமர்சனத்தையும் சந்தித்திருந்தார்.

அதிக விவாதம்

அவருடைய இடத்தில் ஒரு ஆல் ரவுண்டர் இந்திய அணிக்கு தேவை என்ற நிலையில், தற்போது வெங்கடேஷ் ஐயர் ஹர்திக் பாண்டியாவை முன்னிலையில் இருக்கிறார் என்ற வாசிம் ஜாஃபரின் கருத்து, அதிகம் விவாதங்களை உண்டு பண்ணியுள்ளது. ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து, உலக கோப்பை அணியில் இடத்தை முடிவு செய்யலாமா எனவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதே போல, ஐபிஎல் தொடர் மூலம், மீண்டும் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ஹர்திக் பாண்டியா ஏற்கனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

HARDIK PANDYA, WASIM JAFFER, VENKATESH IYER, T 20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்