"இவரு என்ன ட்விட்டர 'குத்தகை'க்கு எடுத்து வெச்சுருக்காரு போல..." 'கிரிக்கெட்' ரசிகரை செஞ்சு விட்ட 'வாசிம் ஜாஃபர்'... 'அல்டிமேட்' சம்பவம்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுவும் தான் பகிரும் பதிவுகள் எல்லாம் மீம்ஸ் தொடர்பாக மட்டுமே உள்ளது. சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹாக் தொடர்பாக மீம்ஸ் ஒன்றை பகிர்ந்தது, அஸ்வினை குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பகிர்ந்திருந்தது உள்ளிட்ட பல பதிவுகள் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

அதே போல வாசிம் ஜாபர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில், உலகளவில் மிகவும் பிரபலமான டி 20 போட்டியாக ஐபிஎல் உள்ளது. இதே போன்று இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் டி 20 தொடர்கள் நடைபெற்றாலும் ஐபிஎல் அளவுக்கு எந்த தொடர்களும் உலகளவில் பிரபலமில்லை. 

இந்நிலையில், ட்விட்டரில் ஒருவர் ஐபிஎல் போட்டிகளை குறை கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார். 'டி 20 உலக கோப்பை, ஆசிய கோப்பை போன்றவை, கடந்த செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடைபெற்ற டி 20 தொடர் ஒன்றால் பாதிக்கப்பட்டது. அதனை மீண்டும் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இந்த டி 20 தொடரால் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது ' என ஐபிஎல் போட்டிகளை காட்டமாக விமர்சித்துள்ளார். 

 

அந்த நபரின் பதிவை கிண்டல் செய்யும் வகையில் பகிர்ந்த வாசிம் ஜாஃபர், அதனுடன் மீம்ஸ் ஒன்றையும் இணைத்து பகிர்ந்தார். வழக்கம் போல வாசிம் ஜாஃபர் பகிரும் மீம்ஸ்கள் வைரலாவது போல இதுவும் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்