"மீண்டும் மீண்டுமா?".. சிவனேன்னு இருந்த வாகனை ஜாலியா சீண்டிய வாசிம் ஜாஃபர்.. வைரல் ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனும் அவ்வப்போது மாறி மாறி ட்விட்டரில் பல ஜாலியான மோதல்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மனைவி கோபத்தால இப்டி எல்லாம் கூட அதிர்ஷ்டம் அடிக்குமா பாஸ்?".. மில்லியனில் புரண்ட கணவர்!!.. காரணம் இது தான்!!

இந்திய கிரிக்கெட் அணி ஏதாவது தொடரில் மோசமாக விளையாடும் போது அதனை விமர்சிக்கும் மைக்கேல் வாகன், வாசிம் ஜாஃபரை குறிப்பிட்டு ஏதாவது ட்வீட் செய்வார். அதே போல இங்கிலாந்து அணி ஏதாவது தோல்வி அடையும் போது மைக்கேல் வாகனை குறிப்பிட்டு ஏதாவது ஜாலியான கருத்துக்களையும் ட்விட்டரில் முன்வைப்பார் வாசிம் ஜாஃபர்.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் மைக்கேல் வாகனை குறித்து வாசிம் ஜாஃபர் போட்டுள்ள ட்வீட் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மோதி இருந்தது. இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியையும் பதிவு செய்திருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி ஒரு டி 20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைவது இதுதான் முதல் முறை.

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, பங்களாதேஷ் அணியும் சர்வதேச அணியை முதல் முறையாக வொயிட் வாஷ் செய்து பட்டையை கிளப்பி உள்ளது. இந்த வெற்றிக்கு பின்னர் பங்களாதேஷ் U 19 அணியின் பேட்டிங் கன்சல்ட்டான்ட்டாக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதில் தான் பங்களாதேஷ் டிரைனிங் ஜெர்சியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "ஹலோ மைக்கேல் வாகன் நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லை" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு பதில் ட்வீட் செய்த மைக்கேல் வாகன், டி 20 உலக கோப்பையின் நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி இருப்பதை குறிப்பிட்டு, அந்த அணி வீரர் ஜோஸ் பட்லர் உலக கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Also Read | 4 வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த கோலி.. "அந்த மேட்ச் முன்னாடி அவருகிட்ட அஸ்வின் சொன்ன விஷயம்".. வைரல் பின்னணி!!

CRICKET, WASIM JAFFER, MICHAEL VAUGHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்