எந்த வீரரும் ‘எட்டாத’ மைல்கல்... ‘41 வயதில்’ வரலாற்று சாதனை படைத்து ‘அசத்தல்’...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவாசிம் ஜாபர் ரஞ்சிக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர் ரஞ்சிக் கோப்பையில் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். ஏற்கெனவே ரஞ்சிக் கோப்பையில் 150 போட்டிகளுக்கு மேல் விளையாடி இவர் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் கேரள அணிக்கு எதிரான போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடிவரும் வாசிம் ஜாபர் 12 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் ரஞ்சிக் கோப்பையில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.
41 வயதாகும் வாசிம் ஜாபர் 1996-97ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். மேலும் இவர் 253 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 19,147 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் இவர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாபர் 5 சதங்கள், 11 அரை சதங்களுடன் 1,944 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக இரட்டை சதங்கள் அடித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: ஜூனியர் 'உலகக்கோப்பையில்'... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 'வீரர்கள்' செய்த காரியம்... 'கடைசி' வரைக்கும் நீங்க...!
- பிராக்டீஸ் பண்ணாம 'இப்டி' ஊர சுத்துறாரு... இதெல்லாம் 'கேட்க' மாட்டீங்களா?... பிரபல அணியை கேள்வி கேட்ட ரசிகர்!
- 'பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றம்'... 'திட்டவட்டமாக கூறிய விராட் கோலி’... 'அப்போ அந்த இளம் வீரருக்கு வாய்ப்பு?'...
- 'மயங்க் உள்ளே'... 'ரோகித் வெளியே'... 'மற்றுமொரு இளம்வீரருடன்'... 'நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய வீரர்கள் யார்?'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘அவரு விளையாடியே ரொம்ப நாளாச்சு’.. ‘இனி டீம்ல எடுக்குறது கஷ்டம்தான்’.. யார சொல்றாரு முன்னாள் கேப்டன்?
- தம்பி! 'ஐபிஎல்ல' கலந்துக்காத... 'அட்வைஸ்' சொன்ன முன்னாள் கேப்டன்... 'முடியாது' செம ரிப்ளை கொடுத்த சின்ன பையன்!
- என் ‘உடம்புல’ எங்க இருக்கு?... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை?’.. ‘பரபரப்பு’ சம்பவம்...
- டெஸ்ட் மற்றும் 'ஒருநாள்' தொடர்களில் இருந்து 'ஓபனிங்' பேட்ஸ்மேன் விலகல்?... அவருக்குப்பதில் விளையாடப்போவது... இந்த 'இளம்வீரர்கள்' தானாம்!
- மறுபடியும் 'மொதல்ல' இருந்தா... ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து 'விலகிய' முக்கிய வீரர்?... சிக்கலில் சிக்கித்தவிக்கும் கேப்டன்!