டி20 கிரிக்கெட்டை ‘பயமே’ இல்லாம விளையாடுறாங்க.. இவங்கதான் ‘உலகக்கோப்பை’ வெல்ல வாய்ப்பு இருக்கு.. வாசிம் அக்ரம் கணித்த அணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்ல வாய்ப்பு அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா 2-ம் அலை அதிகரித்து வருவதன் காரணமாக இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது. அப்படி இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போட்டிகள் மாற்றப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வாசிம் அக்ரம், இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்ல வாய்ப்புள்ளது என கருத்து கூறியுள்ளார். அதில், ‘டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டை பயமின்றி விளையாடும் அணுகுமுறையை கொண்டுள்ளனர். அதேபோல் இங்கிலாந்து அணியும் கோப்பையை வெல்வதில் முன்னணியில் உள்ளது. மேலும் நியூசிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணி சரியான கலவையை செய்வதற்கு இன்னும் உழைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஒரு பாகிஸ்தான் வீரராக உலகக்கோப்பையை எங்கள் அணி வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி வென்றால் எங்களது கனவுகள் நனவாகும். அவர்கள் சரியான வீரர்கள் கலவையை தேர்வு செய்துவிட்டால் சிறந்த அணியை பெற்று கடுமையாக போராட முடியும். பாகிஸ்தான் அணியில் 5 மற்றும் 6-வது வரிசையில் உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும். இவைகளை செய்தால் பாகிஸ்தான் வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது’ என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்