"இப்படியும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம்.." பட்டையை கிளப்பிய வாஷிங்டன் சுந்தர், நடராஜன்.. வரவேற்பை அள்ளும் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை 23 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் அணி 3 வெற்றிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “ஜெயிக்கிற நேரத்துல தேவையில்லாம அப்படி செஞ்சிருக்க கூடாது”.. சீனியர் வீரரை மறைமுகமாக சாடிய ரோகித்..!

இதில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெற்று, சற்று பலத்துடன் திகழ்கிறது.

கடந்த ஐபிஎல் சீசனில், 3 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்த ஹைதராபாத் அணி, இந்த முறை தொடக்கத்தில் தடுமாற்றம் கண்டாலும் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன்

அதிலும் குறிப்பாக, தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர், அந்த அணிக்காக தொடர்ந்து சிறப்பான பங்கை ஆற்றி வருகின்றனர். நடராஜன் தொடர்ந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் வேளையில், மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நல்லதொரு பங்களிப்பை ஹைதராபாத் அணிக்காக வழங்கி வருகிறார்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதியான இன்று, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் என பலரும் தமிழ் மக்களுக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சில கிரிக்கெட் வீரர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை  குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர், சற்று வித்தியாசமாக தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை மக்களுக்கு தெரிவித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன், தற்போதைய ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்துள்ளார்.

டீச்சரான வாஷிங்டன் சுந்தர்

அவருடன் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர், தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை வித்தியாசமாக வெளிப்படுத்தி உள்ளனர். பூரனுக்கு தமிழில் புத்தாண்டு வாழ்த்து எப்படி கூற வேண்டும் என்பதை வாஷிங்டன் சுந்தர் சொல்லி கொடுக்க, அதனை சரியாக பின்பற்றி, பூரானும் அழகாக தமிழிலேயே சொல்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் அழகாக தமிழிலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை சொல்லும் வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வரவேற்பினை பெற்று வருகிறது.



சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களின் அடுத்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நாளை (15.04.2022) எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "உங்க ஏரியா-ல மின்சாரம் துண்டிப்பா? இத மறக்காம செய்யுங்க".. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!

CRICKET, WASHINGTON SUNDAR, NICHOLAS POORAN, WISH TAMIL NEW YEAR, WISH TAMIL NEW YEAR IN TAMIL, தமிழ் புத்தாண்டு வாழ்த்து, வாஷிங்டன் சுந்தர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்