‘UAE-க்கு அவர் வரமாட்டார்’.. விலகிய ‘RCB’ ஆல்ரவுண்டர்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. என்ன காரணம்..? சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 14-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கியது. போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த சமயத்தில், கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.

மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில், இதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இரு அணிகளும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விளையாடி வரும் ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் வாசிங்டன் சுந்தரும் இடம்பெற்றிருந்தார். ஆனால் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வலைப்பயிற்சியில் அவரது விரலில் காயம் ஏற்பட்டது.

அதனால் சிகிச்சைக்காக இங்கிலாந்து தொடரில் வாசிங்டன் சுந்தர் விளையாடவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்க 3 மூன்று வாரங்களே உள்ள நிலையில், அவரது காயம் இன்னும் குணமடைவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் வாசிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என பெங்களூரு அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் வாசிங்டன் சுந்தர் இல்லாதது பெங்களூரு அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதனால் இவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் என்ற வீரர் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்