சிங்கிள் போச்சே..! மார்க்கின் ராஜதந்திரத்தை தவிடுபொடியாக்கிய வாஷிங்டன் சுந்தர்.. சும்மா பறந்து போய் பிடிச்ச கேட்ச்.. வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பிடித்த கேட்ச் பலரையும் பிரம்மிக்க செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | ஜூடோ ரத்னம் மறைவு..."மறக்க முடியாத சரித்திரம்".. அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கம்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இதனையடுத்து இரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டிவோன் கான்வே களத்திற்கு வந்தனர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடி காட்ட அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அப்போது, 4.2 வது ஓவரில் ஆலனுடைய விக்கெட்டை வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.

35 ரன்களை எடுத்திருந்த ஆலன் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இதனையடுத்து மார்க் சாப்மேன் கிரீஸுக்கு வந்தார். அதே ஓவரில் கடைசி பந்தை எதிர்கொண்ட மார்க் அதனை சிங்கிளாக மாற்ற முயன்றார். ஆனால், பந்து பேட்டில் பட்டு எகிறியது. தரையோடு தரையாக சென்ற பந்தை டைவ் அடித்து கேட்ச் எடுத்தார் சுந்தர்.

பந்து வீசிய உடனேயே தனக்கு அருகில் சென்ற பந்தை டைவ் அடித்து பிடித்த சுந்தரை சக வீரர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | எதே.? ஒரு‌ கேஸ் 72 வருசமா நடந்துச்சா.!! இப்ப மட்டும் எப்படி முடிவுக்கு வந்தது.? சுவாரஸ்ய தகவல்.

CRICKET, WASHINGTON SUNDAR, FIRST T20, FIRST T20 AGAINST NZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்