கலக்கலான பெண் Getup-ல் வாஷிங்டன் சுந்தர் …. பிக்பாஸ் ரைசா போட்ட jolly கமெண்ட்… Viral pics!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கலக்கலான பெண் Getup-ல் வாஷிங்டன் சுந்தர் …. பிக்பாஸ் ரைசா போட்ட jolly கமெண்ட்… Viral pics!
Advertising
>
Advertising

Also Read | உக்ரைனுக்கு வந்த ஐ.நா. தலைவர்.. திடீரென ரஷ்யா செய்த அதிர்ச்சி காரியம்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்..!

தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்தார். பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர் இப்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஆல்ரவுண்டராக கலக்கி வருகிறார்.

Washington sundar bhuvaneshwar kumar latest viral pics

சமூகவலைதளங்களில் கலக்கும் சுந்தர்…

வாஷிங்டன் சுந்தர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.  சமீபத்தில் சுந்தர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலானது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று SRH அணியில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ்பூரனுக்கு தமிழில் புத்தாண்டு வாழ்த்து எப்படி கூற வேண்டும் என்பதை வாஷிங்டன் சுந்தர் சொல்லி கொடுக்க, அதனை சரியாக பின்பற்றி, பூரனும் அழகாக தமிழிலேயே சொல்வார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் அழகாக தமிழிலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை சொல்லும் வீடியோ, இணையத்தில் அதிகம் வரவேற்பினை பெற்றது.

பிக்பாஸ் ரைசாவின் கமெண்ட்…

அதையடுத்து இப்போது அவர் சக ஹைதராபாத் அணி வீரரான புவனேஷ்வர் குமாரோடு பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர அது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தோடு “Your New obsession”  என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகவே பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ரைசா வில்ஸன் அந்த புகைப்படத்தில் “And she makes an appearance” கமெண்ட் செய்ய பலரது கவனத்தையும் அவரது கமெண்ட் ஈர்த்துள்ளது. ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இப்போது சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் தீவிரமாக இயங்கி வரும் அவர் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் ஜாலியான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். ரைசாவைப் போல பல ரசிகர்களும் அந்த புகைப்படங்களுக்கு ஜாலியான கமெண்ட்களை இட்டு வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WASHINGTON SUNDAR, BHUVANESHWAR KUMAR, BIGG BOSS RAIZA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்