T20WorldCup : பந்து Bat-ல பட்டுதா இல்லையா??.. Pak vs Ban போட்டியில் வெடித்த சர்ச்சை... என்ன நடந்துச்சு??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் 12 சுற்று தற்போது ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

Advertising
>
Advertising

குரூப் 1 இல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து குரூப் 2 வில் எந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை முடிவு செய்யும் போட்டிகள் இன்று நடைபெற்றிருந்தது.

முதலில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி இருந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக அரை இறுதி வாய்ப்பை இழக்கும் சூழலும் உருவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி இருந்தன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பெறும் என்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடி இருந்த பாகிஸ்தான் அணி, 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறி உள்ளது. இதன் காரணமாக குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சிறந்த ரன் ரேட்டை சேகரித்தால் குரூப் 2 வில் முதல் இடத்தை பெறும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஷகிப் அல் ஹசன் முதல் பந்தில் அவுட் ஆனது தொடர்பான விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 11வது ஓவரில், ஷாதாப் கான் வீசிய பந்தில் ஷகிப் அல் ஹசன் எல்பிடபுள்யூ ஆனதாக நடுவர் அறிவித்தர். ஆனால், பந்து பேட்டில் பட்டதாக தெரிந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் Review செய்ய மூன்றாம் நடுவரும் அவுட் என அறிவித்தார். மூன்றாம் நடுவரும் அவுட் என அறிவிக்க பந்து பேட்டில் பட்டதாக தெரிந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில், பந்து பேட்டில் படாமல் பேட்டின் நிழல் தான் அப்படி தெரிந்திருக்கலாம் என்றும் அது அவுட் தான் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படி இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

SHAKIB, PAKVBAN, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்