என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு.. அப்போ அவ்ளோ தானா..! ரசிகரின் பதிவுக்கு வார்னர் கொடுத்த ‘அல்டிமேட்’ பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக வேண்டும் என்று ரசிகர் போட்ட பதிவுக்கு வார்னர் அளித்த கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 14 சீசன் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆனால் இந்த தொடர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மோசமானதாக அமைந்துவிட்டது. இந்தியாவில் நடைபெற்ற தொடரின் முதல் பாதியில், ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.
அதனால் திடீரென பாதியிலேயே டேவிட் வார்னரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இதனை அடுத்து கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிளேயிங் லெவனிலும் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. தொடர்ச்சியாக அணியிலிருந்து வார்னர் ஓரம் கட்டுப்பட்டு வந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் டேவிட் வார்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 3 அரைசதங்களுடன் 289 ரன்கள் குவித்தார். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடரில் ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்று அசத்தினா.ர் ஆஸ்திரேலிய அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல வார்னர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
இதனிடையே ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என 2 புதிய அணிகள் இணைய உள்ளதால், அனைத்து அணிகளின் வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. அதில் வரும் 30-ம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்க உள்ள வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் ஹைதராபாத் அணி வார்னரை தக்கவைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேன் பேஜ் பதிவிட்ட பதிவுக்கு கீழே ரசிகர் ஒருவர், டாம் மூடி தலைமை பயிற்சியாளர் மற்றும் டேவிட் வார்னர் கேப்டனாக வேண்டுமென்றும் பதிவிட்டு இருந்தார். இதற்கு டேவிட் வார்னர் ‘நோ தேங்க்ஸ்’ என கமெண்ட் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை ஓரம் கட்டியதால், வார்னர் இப்படி கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் போதுமடா சாமி என்னை விட்டுவிடுங்கள் என்ற முறையில் நோ தேங்க்ஸ் என டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த வருஷம் ஐபிஎல் முதல் போட்டியே.. ‘சென்னை’ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
- ‘இன்னும் ஒரு வாரத்துல தெரிஞ்சிடும்’!.. தோனிக்கு அப்புறம் சிஎஸ்கே தக்க வைக்கப்போற வீரர் ‘இவர்’ தானா..? சிஇஓ ‘சூசகமாக’ சொன்ன பதில்..!
- ‘நல்லா செம கட்டு கட்டுறாங்கப்பா..!’- தல தோனி உடன் CSK அணியினரின் அவுட்டிங் போட்டோஸ் வைரல்..!
- ‘தல’ தோனிக்கே பிடிச்சுப்போச்சா..? அப்போ CSK அணிக்கு ஒரு தமிழக வீரர் கிடைச்சாச்சா..?- வைரல் புகைப்படம்!
- 2022 ஐபிஎல்-ல 'அந்த பையன' ஏலம் எடுக்க இப்போவே பலர் வெயிட்டிங்...! 'மினிமம் 20+ கோடி கன்ஃபார்ம்... ' - முன்னாள் வீரர் கருத்து...!
- ‘அன்னைக்கு 10 லட்சம் ரூபாய், இன்னைக்கு ‘இத்தனை’ கோடிகள் வந்தும்…’- அடக்கமாகப் பேசும் இந்திய அணியின் ‘ஆல்-ரவுண்டர்’..!
- ‘பிடிச்சவுங்க ஒதுக்கும்போது… வலிக்குதுங்க..!’- வார்னர் இந்த அளவுக்கு கலங்கிப் போனதற்கு யார் காரணம்..?
- ‘வார்னரை பத்தி எப்படி இந்த மாதிரி எழுதுனாங்கன்னு தெரியல’!.. விமர்னங்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் கொடுத்த பதிலடி..!
- ‘இது காரணமா இல்லைன்னா வேற என்ன காரணமா இருக்கும்..?’- வார்னரை நீக்கியதற்கு ஹைதராபாத் அணி என்ன சொல்றாங்கன்னு பாருங்க..!
- வெற்றியோ, தோல்வியோ இந்த ‘பாசம்’ மட்டும் எப்பவும் மாறாது.. வரவேற்பை பெற்ற வார்னரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி..!