VIDEO: செய்தியாளர்கள் சந்திப்பில் ‘வார்னர்’ செஞ்ச செயல்.. வேகமாக ஓடி வந்து ‘தடுத்த’ ஐசிசி நிர்வாகி.. மறுபடியும் பரபரப்பை கிளப்பிய அந்த விவகாரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 22-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக குசல் பெரேரா மற்றும் அசலங்கா ஆகியோர் தலா 35 ரன்களும், பானுகா ராஜபக்சே 33 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (David Warner) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மேசையின் மீதிருந்த இரண்டு கொக்கோ-கோலா (Coca-Cola) பாட்டில்களை எடுத்து கீழே வைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஐசிசி நிர்வாகி, உடனே ஓடி வந்து வார்னரிடம் அந்த பாட்டில்களை மேலே வைக்க அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து, ‘கிறிஸ்டியானோவுக்கு ஒரு விஷயம் நல்லதென்றால், அது எனக்கும் நல்லதுதானே’ என சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, கொக்கோ கோலா பாட்டில்களை மீண்டும் மேசையின் மீது வார்னர் வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), இதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கொக்கோ-கோலா பாட்டில்களை எடுத்து கீழே வைத்துவிட்டு தண்ணீரைக் குடிக்குமாறு அறிவுறுத்தினார். இது அப்போது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

ரொனால்டோ இப்படி செய்ததால், அப்போது கொக்கோ-கோலா நிறுவனத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 29,377 கோடி ரூபாய்) நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று வார்னரும் இதேபோல் செய்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்