VIDEO: சதத்தை தவறவிட்ட சோகத்துல கூட மனுசன் மாஸ் பண்றாரே.. சிறுவனுக்கு ‘வார்னர்’ கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசதத்தை தவறவிட்ட சோகத்திலும் டேவிட் வார்னர் செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹப்பா மைதானத்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (16.12.2021) ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்கஸ் ஹாரிஸ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினார். இதில் மார்க்கஸ் ஹாரிஸ் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே உடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது 95 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் டேவிட் வார்னர் ஆட்டமிழந்ந்தார். அதனால் 5 ரன்களில் சதத்தை தவறவிட்டடார்.
சதத்தை தவறவிட்டு சோகமாக வெளியேறிய வார்னர், அப்போது மைதானத்தில் இருந்த சிறுவனுக்கு தனது கிளவுஸை பரிசாகக் கொடுத்துவிட்டு சென்றார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் 94 ரன்களில் ஆட்டமிழந்து டேவிட் வார்னர் சதத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது’!.. ‘புஷ்பாவாக மாறிய வார்னர்’.. பங்கமாய் கலாய்த்து ‘கமெண்ட்’ செய்த கோலி.. ‘செம’ வைரல்..!
- VIDEO: அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும்.. ரன் அவுட்டில் இருந்து நேக்கா எஸ்கேப் ஆன வார்னர்..!
- என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு.. அப்போ அவ்ளோ தானா..! ரசிகரின் பதிவுக்கு வார்னர் கொடுத்த ‘அல்டிமேட்’ பதில்..!
- ‘வார்னரை பத்தி எப்படி இந்த மாதிரி எழுதுனாங்கன்னு தெரியல’!.. விமர்னங்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் கொடுத்த பதிலடி..!
- வெற்றியோ, தோல்வியோ இந்த ‘பாசம்’ மட்டும் எப்பவும் மாறாது.. வரவேற்பை பெற்ற வார்னரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி..!
- ‘இவரையா வெளியே உட்காரவச்சீங்க’!.. டி20 உலகக்கோப்பையில் என்ன ‘விருது’ வாங்கியிருக்காரு பாருங்க.. SRH அணியை வச்சு செய்யும் ரசிகர்கள்..!
- ‘ஐபிஎல் பாசம்’.. வில்லியம்சனை விட்டுக்கொடுக்காத வார்னர்.. இன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு ‘சூப்பர்’ பதிலளித்த வார்னர்..!
- “இதெல்லாம் ரொம்ப தப்புங்க… நாங்கலாம் இப்படியா பண்ணோம்”- வார்னரை குத்திக்காட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!
- ‘வெட்கக்கேடு’!.. இதுதான் உங்க ஸ்பிரிட் ஆஃப் கேமா..? வார்னரை விட்டு விளாசிய முன்னாள் ‘இந்திய’ வீரர்..!
- ஒருவேளை SRH உங்களை தக்க வைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க..? டேவிட் வார்னர் அதிரடி பதில்..!