‘அதிகாலை பயங்கர சத்தம் கேட்டது’!.. மாலத்தீவு கடற்பகுதியில் விழுந்த சீன ‘ராக்கெட்’ குறித்து பகிர்ந்த வார்னர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மாலத்தீவுப் பகுதியில் அதிகாலை பயங்கரமான சத்தம் கேட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத்தை அடுத்து ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தது. இதனை அடுத்து அனைத்து வீரர்களும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இதில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையே விமான சேவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் அவர்களது வீட்டுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்களை பத்திரமாக மாலத்தீவுக்கு பிசிசிஐ அனுப்பி வைத்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என மொத்தம் 37 பேர் மாலத்தீவில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சீன ராக்கெட் மாலத்தீவு கடற்பகுதியில் விழுந்தது குறித்து ஆஸ்திரேலிய வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரருமான டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார். அதில், ‘அதிகாலை 5.30 மணியளவில் பயங்கர சத்தத்தை நாங்கள் கேட்டோம். இதை சிலர் ராக்கெட் கடலில் விழுந்த சத்தமாக இருக்கும் என கூறினர்’ என வார்னர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சீனாவின் வென்சங் ஏவுதளத்தில் லாங் மார்ச் 5பி (Long March 5B) என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் நிறுவப்பட இருக்கும் சீனாவின் ஸ்பேஸ் ஷ்டேஷனின் ஒரு பகுதி இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் கட்டுப்பாடின்றி பூமியைச் சுற்றுக்கொண்டிருந்த ராக்கெட்டின் ஒரு பாகம், எப்போது வேண்டுமானதால் பூமியில் விழும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்படி இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ராக்கெட்டின் பாகங்கள் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்