‘ஒரு வேகத்துல அப்படி பேசிட்டேன்.. மன்னிச்சிருங்க’!.. பரபரப்பை கிளப்பிய ‘பாகிஸ்தான்’ வீரரின் பேச்சு.. கொந்தளித்த நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மதரீதியாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியின் தண்ணீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan), மைதானத்தில் தொழுகை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ்(Waqar Younis) இதுகுறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதில், ‘பல லட்சம் இந்துக்களுக்கு முன் முகமது ரிஸ்வான் நமாஸ் செய்தார். இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை விட, இதுதான் எனக்கு ஸ்பெஷலாக இருந்தது’ என வாக்கர் யூனிஸ் கூறினார். அப்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரும் அருகில் இருந்தார்.
இந்த சூழலில் வாக்கர் யூனிஸ் கூறியது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே (Harsha Bhogle) தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ‘வாக்கர் யூனிஸ் போன்ற முன்னாள் வீரர் ரிஸ்வானின் தொழுகை குறித்து இப்படியொரு கருத்து தெரிவித்தது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை புறந்தள்ளிவிட்டு கிரிக்கெட் பற்றி மட்டும் பேச முயன்று கொண்டிருக்கும்போது இப்படி கருத்து தெரிவிப்பது மோசமானது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட்டுக்கு சர்வதேச அளவில் தூதுவர்களாக இருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் நாகரீகத்துடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். இதற்காக வாக்கர் யூனிஸ் மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன். கிரிக்கெட் மூலம் நாம் ஒன்றிணைய வேண்டுமே தவிர மதத்தைக் காரணம் காட்டி பிளவுபடக் கூடாது.
இந்த கருத்து பின் இருக்கும் ஆபத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது வெறும் கிரிக்கெட் விளையாட்டுதான் என்பதை இவர்கள் உணர வேண்டும்’ என ஹர்சா போக்லே பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வாக்கர் யூனிஸ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ‘ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன். நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. என்னுடைய கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேண்டுமென்றே அப்படி பேசவில்லை, தவறு நிகழ்ந்துவிட்டது. விளையாட்டு என்பது இனம், நிறம், மதத்தை தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் விஷயம்’ என வாக்கர் யூனிஸ் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னது இவர் இப்படி பண்ணாரா.. நம்பவே முடியலையே..! தடாலடியாக ப்ளேயிங் 11-ல் இருந்து நீக்கிய தென் ஆப்பிரிக்கா.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
- VIDEO: விட்டா ரெண்டு பேரும் அடிச்சிப்பாங்க போலயே.. டி20 உலகக்கோப்பையை பரபரப்பாக்கிய மோதல்..!
- ‘அந்த தோல்வியை மறந்துடுங்க’.. இனிமேல் நம்ம பண்ண வேண்டியதெல்லாம் இதுதான்.. சோர்ந்துபோன இந்திய அணிக்கு ‘சூப்பர்’ அட்வைஸ் கொடுத்த முன்னாள் கேப்டன்..!
- ‘ஒரு மேட்ச் வச்சு முடிவு பண்ணாதீங்க’.. கொஞ்சம் இந்த மேட்சை பாருங்க அவர் யாருன்னு தெரியும்.. முகமது ஷமிக்கு குவியும் ஆதரவு..!
- ‘இப்படி முட்டாள்தனமா கேள்வி கேட்கும்போது அமைதியா இருக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்’!.. தமிழக வீரரின் ‘வேறலெவல்’ ட்வீட்..!
- ‘ஆன்லைன் கும்பலை விட இந்தியா மேல அவருக்கு ரொம்பவே அக்கறை இருக்கு’.. வெளுத்து வாங்கிய சேவாக்..!
- VIDEO: ‘பல வருச வலி’!.. பாகிஸ்தான் ஜெயிச்சதும் ‘கண்ணீர்’ விட்டு அழுத நபர்.. யார் இவர்..?
- VIDEO: ‘இப்படி ஒரு நாள் நிச்சயம் நடக்கும்’!.. 5 வருசத்துக்கு முன்னாடியே கணித்த தோனி.. திடீரென வைரலாகும் ‘பழைய’ வீடியோ..!
- இந்த 'பேச்சு' பேசுறீங்க இல்ல...? 'ஒரு பேட், ஹெல்மெட் எடுத்து தரேன்...' 'கிரவுண்டுக்கு வந்து விளையாடி பாருங்க...' அப்போ தெரியும்...! - 'கேள்வி' கேட்டவர்களை 'பந்தாடிய' கோலி...!
- ‘இந்த நாளை என்னைக்கும் மறக்க மாட்டேன்’!.. பாகிஸ்தான் வீரரின் ‘Fan boy’ மொமண்ட்.. தோனிக்கு நேராக நிற்கிற வீரர் யாருன்னு தெரியுதா..?