'எல்லா கோட்டையும் அழிங்க'.. வீரர் எடுத்த அதிரடி முடிவு.. ஆச்சர்யமாகக் கேட்ட கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுயுனிவெர்சல் பாஸ் என்று கிரிக்கெட் உலகத்தால் புகழ்ந்து பேசப்படும் கிரிஸ் கெயில், எப்போது ஆக்ரோஷமாக ஆடி, பந்துவீச்சாளர்களை திணறடிப்பவர். உலகின் பல முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் தொடங்கி, பல நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களும் கெயிலுக்கு ரசிகர்கள் என்றால் மிகையல்ல.
மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிராக இந்தியா இன்று விளையாடுவதற்கு முன்புவரை, மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியாமல், ஒரே ஒரு வெற்றியுடன் 8வது இடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் இன்றைய உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பேட்டி அளித்த கெயிலின் பேச்சு கிரிக்கெட் உலகத்தில் கவனம் பெற்றுள்ளது.
அதன்படி, உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்த கெயில், தற்போது, மீண்டும் தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் தொடரிலும், அதன் பின்னர் நடக்கவுள்ள ஒரு நாள் தொடரில் விளையாட பச்சை சிக்னல் காட்டியுள்ளார். ஆனால் அதே சமயம் டி20 போட்டிக்கு ரெட் சிக்னல் காட்டியுள்ளார்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாண்டுவரும் கிறிஸ் கெயிலின் கோரிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்குமா என்பது குறித்து பொருத்திருந்துதான் பார்க்க முடியும். அந்நாட்டு அணியின் கேப்டன், ‘அப்டியா சொன்னார்? இப்படிச் சொன்னது குறித்து, தனக்கு எதுவும் தெரியாது’ என்றும், அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது சிறப்பான ஒன்றுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நான் இருவரில் இவரைத் தான் தேர்ந்தெடுப்பேன்..’ இந்திய அணி குறித்து சச்சின் கருத்து..
- ‘என் மனைவி அதைப் பார்த்துக் கதறி அழுதார்..’ செய்தியாளரிடம் கேப்டன் உருக்கம்..
- ‘காவி நிற ஜெர்சியா, கூடவே கூடாது’... 'இந்திய அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு'!
- 'எல்லா கண்ணும் உங்க மேலதான்'.. 'மைதானத்தையே நெகிழ வைத்த' அம்மாவின் செயல்!
- 'தல'யோட சாதனையை'... 'இவர் அடிச்சு தும்சம் பண்ண போறாரு'... 'எதிர்பார்ப்பில் ரசிகர்கள்'!
- ‘வைரலாகும் பிரபல வீரரின் விக்கெட் வீடியோ..’ கலாய்த்து பதில் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே..
- 'மழ' வர்ற மாதிரி இருக்கு ... 'அழுதா' ரோடு தெரியாது.. 'பாத்து போங்க'.. ரசிகர்களைக் கலாய்த்த 'காவல்துறை'!
- ‘இது எங்க வேர்ல்டு கப் எப்டி ஜெயிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்..’ இந்தியா - இங்கிலாந்து போட்டி குறித்து நம்பிக்கை..
- 'அதெப்படி சொல்லலாம்?' வறுக்கும் ரசிகர்கள்.. 'அவர் நல்ல பேட்ஸ்மேன்' - கிரிக்கெட் பிரபலம்!
- 'மேட்ச் இருக்கப்போ இப்டியா நடக்கணும்?'... 'கவலையில் இந்திய அணி வீரர்கள்'!