'அந்த வெறி'.. 'அந்த நிதானம்'.. 'இதெல்லாம் கத்துக்கணுங்க'.. விண்டீஸ்க்கு எதிரான அணியில் இணைந்த வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நவ்தீப் சைனி, கலீல் அஹமது, ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் உள்ளிட்ட வீரர்கள் இணைக்கப்பட்டுள்ள இந்த போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படவில்லை; அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மாறாக க்ருணல் பாண்ட்யா டி20 போட்டிகளுக்கு பிறகு இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய க்ருணல் பாண்ட்யா, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்த போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மும்பை அணிக்காக ஆடியதுதான், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கோலியிடம் இருந்து, ஆட்டத்தின் மீதான வெறியையும், நின்று ஆடும் திறனையும், சிறந்த ஃபினிஷரான தோனியிடம் இருந்து, சூழல்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஆடும் திறனையும் கற்றுக்கொள்ள விரும்புவதாக க்ருணல் பாண்ட்யா கூறியுள்ளார்.

3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த ஆட்டத்தின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

VIRATKOHLI, MSDHONI, KRUNALPANDYA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்