'சூர்யகுமார் யாதவ் எப்படி இவ்ளோ பெருசா ஜெயிச்சாரு'!?.. அவரோட SUCCESS SECRET 'இது' தான்!.. 'இனி அவர யாராலயும் தடுக்க முடியாது'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் முதல் முறையாக களமிறங்கி அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவின் வெற்றி வியூகம் குறித்து முன்னாள் வீரர் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடியதோடு மட்டுமல்லாமல் சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 480 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் சூர்யகுமார் யாதவ் பெற்றார்.
அவர் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணிக்காக முதல் முறையாக பங்கேற்பார் என்று அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்து வந்த நிலையில், அவருக்கான வாய்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த தொடரில் வழங்கவில்லை.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பை முதல் முறையாக வழங்கியது. முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கவில்லை இரண்டாவது போட்டியில் தான் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். எனினும், 2வது போட்டியில் அவர் பேட்டிங் ஆடவில்லை. ஆகவே, மூன்றாவது போட்டியில் அவர் நிச்சயம் பேட்டிங் ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது போட்டியில் அவர் திரும்பவும் பங்கேற்கவில்லை.
அதைத் தொடர்ந்து, நான்காவது போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது முதல் இன்னிங்ஸ் என்று கூட பார்க்காமல் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, இந்தியாவுக்காக தனது டி20 கிரிக்கெட் பயணத்தை அதிரடியாக தொடங்கினார்.
அதுமட்டுமின்றி, 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 180க்கு மேல் உயிர்த்த முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 184 ஆகும்.
மேலும், ஐந்தாவது போட்டியான கடைசி போட்டியில் 17 பந்துகளில் 32 ரன்கள் அடித்து சூர்யா அசத்தினார். மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என அவரது ஸ்ட்ரைக் ரேட் 188 என உயர்ந்தது.
இந்நிலையில், சூர்ய குமார் யாதவின் பேட்டிங் திறன் குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன், "மிக எளிமையாக தனது கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். அவர் கிரிக்கெட் விளையாடும் போது எந்தவித சிந்தனையும் இன்றி எந்த குழப்பமும் இன்றி தனது இயல்பான கிரிக்கெட்டை விளையாடுவதாகவும் , மேலும் அப்படி விளையாடுவது தான் எனக்கு பிடிக்கும் என்று முரளி கார்த்திக்கிடம் கூறியது மிகவும் சரியான விஷயம் ஆகும்.
எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் பீல்டிங் செய்யும் வீரர்களை பார்த்து பயப்படாமல் தங்களுக்கு உரிய இயல்பான மற்றும் டெக்னிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதையே சூர்யா செய்து வருகிறார். அவரது ஆட்டம் மிகவும் எளிமையாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டு வகை பந்துவீச்சிலும் அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் அதிகமாகவே இருக்கும், அது எனக்கு நன்றாக தெரியும் என்றும், சூர்யகுமார் யாதவ் ஒரு மேட்ச் வின்னர்" என்றும் லட்சுமணன் புகழ்ந்து கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பொதுவெளியில் எப்படி பேசணும்னு தோனியை பார்த்து கத்துக்கோங்க’!.. கோலியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்.. விராட் அப்படி என்ன பேசினார்..?
- VIDEO: இப்படியொரு ‘ரன் அவுட்’-ஐ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாரு.. அசால்ட்டா அவுட்டாக்கிய நியூஸிலாந்து வீரர்..!
- 'ரொம்ப நாளாவே வெயிட்டிங்ல இருக்கோம்...' 'ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிப்பாரா கோலி...' - பட்டைய கெளப்புவாரா என வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்...!
- VIDEO: ‘அப்படியே சூர்யகுமாருக்கு நடந்தது மாதிரியே இருக்கே’!.. ‘ஆனா முடிவுதான் வேற’.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!
- 'அவர் அவுட் ஆஃப் பார்மில் இருக்காரு, ஆனா வாய்ப்பு கிடைக்குமா?'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா?'... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!
- ‘அறிமுக தொடரிலேயே இது நடந்துருக்கு’!.. கோப்பையுடன் ‘சூர்யகுமார் யாதவ்’ பதிவிட்ட உருக்கமான பதிவு..!
- 'சும்மா... அதிருதுல'!!.. கோலி-ரோகித் ஓபனிங் formula... வெற்றி formula-வாக மாறியது எப்படி?.. சீக்ரெட் உடைத்த முன்னாள் வீரர்!!
- தீயாக பறந்த ஷாட்ஸ்!.. கண்ணுலயே கணக்கு போடும் 'தல' தோனி!.. சென்னை சூப்பர் கிங்ஸ் இன் full form!!
- 'கே.எல்.ராகுல் நல்லா விளையாடலனா... அப்படியே விட்ருவீங்களா!.. தயவு செஞ்சு 'இத' பண்ணுங்க'!.. இந்திய அணி பேட்டிங்க்கு இப்படி ஒரு சோதனையா!
- ' ஒன் டே மேட்ச்ல சூர்யகுமார் விளையாட சான்ஸ் இல்ல...' 'நான் ஏன் அப்படி சொல்றேன்னா...' - விளக்கம் அளித்த வி.வி.எஸ். லக்ஷ்மன்...!