ஏலத்தில் ‘கேதர் ஜாதவை’ எடுத்தது ஏன்..? ஹைதராபாத் பேட்டிங் ஆலோசகர் லக்ஷ்மன் கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேதர் ஜாதவை ஏலத்தில் எடுத்து குறித்து ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வி.வி.எஸ் லக்ஷ்மன் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி 3-வது இடத்தை பிடித்தது. அதனால் பெரும்பாலான முக்கிய வீரர்களை ஹைதராபாத் அணி விடுவிக்கவில்லை. அதேவேளையில் கேதர் ஜாதவை 2 கோடி கொடுத்து எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடிய கேதர் ஜாதவ், மோசமான ஆட்டம் காரணமாக இந்த ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் 2019 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 162 ரன்களே கேதர் ஜாதவ் எடுத்தார்.
அதனால் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் முதல் சுற்றில் கேதர் ஜாதவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனை அடுத்து கடைசி சுற்றில் ஹைதராபாத் அணி அவரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கேதர் ஜாதவை ஏலத்தில் எடுத்தது குறித்து ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான வி.வி.எஸ் லக்ஷ்மன் ANI ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘கேதர் ஜாதவின் அனுபவத்தை வைத்து எங்கள் மிடில் ஆர்டரை பலப்படுத்த முடியும். சில வருடங்களாக மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களை எதிர்பார்த்திருந்தோம். கேதர் ஜாதவ் சர்வதேச அனுபவமுள்ள ஒரு சிறந்த பவுலர். அவர் எங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான்’ என வி.வி.எஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தல’ என்ன சொன்னார்?.. ‘மேக்ஸ்வெல்லை ஏலம் கேட்கும்போது என்ன நடந்தது?’.. சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
- 'அவர் போட்ட ஒரே ஒரு ட்வீட்'... 'யாருங்க இவங்க'... 'பரபரப்பாக சென்ற ஐபிஎல் ஏலம்'... அதையும் தாண்டி தீவிரமாக தேடிய நெட்டிசன்கள்!
- ‘போட்றா வெடியை’!.. இளம் ‘தமிழக’ வீரரை அதிக விலைக்கு எடுத்த அணி.. பஸ்ஸுக்குள் பறந்த ‘விசில்’ சத்தம்.. கொண்டாடித்தீர்த்த தினேஷ் கார்த்திக்..!
- ‘எகிற வைத்த எதிர்பார்ப்பு’!.. ஏலத்தில் ‘சச்சின்’ மகனை அலேக்கா தூக்கிய அணி.. விலை எவ்வளவு தெரியுமா..?
- போன வருசம் ‘சிஎஸ்கே’-ல விளையாடிய வீரரை வாங்கிய மும்பை.. யாருன்னு ‘கெஸ்’ பண்ணுங்க பாப்போம்..!
- ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’!.. 7 வருசமாக எந்த அணியும் எடுக்காத வீரரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே.. அரங்கம் அதிர எழுந்த ‘கைத்தட்டல்’!
- ஏலத்தில் ‘சச்சின் பேபி’-யை எடுத்த ஆர்சிபி.. ரசிகர் ஒருவர் கேட்ட ‘கேள்வி’.. மொத்தமாக குழம்பிப் போன ரசிகர்கள்..!
- "'சிஎஸ்கே' குடும்பம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..." ஒரே ஒரு 'வெளிநாட்டு' வீரருக்கு இருந்த 'வாய்ப்பு'... சென்னை டீம் எடுத்தது இவர தான்!!
- சிஎஸ்கே விடுவித்த ‘அந்த’ வீரரை முதலில் ஒருத்தருமே ஏலத்தில் வாங்கல.. யாருன்னு தெரியுதா..?
- மேக்ஸ்வெல்லை வாங்க போட்டி போட்ட 'சிஎஸ்கே', 'ஆர்சிபி'... இறுதியில் 'பெருந்தொகை' கொடுத்து வாங்கிய 'அணி'!!