காலியாகும் டிராவிட் வகித்த NCA தலைவர் பதவி.. பொறுப்பை ஏற்க மறுத்த முன்னாள் வீரர்..? பிசிசிஐக்கு அடுத்த தலைவலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக பொறுப்பேற்க முன்னாள் கிரிக்கெட் வீரரிடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து பயிற்சியாளராக செயல்பட விரும்பம்பாததால், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ களமிறங்கியது.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டிடம் (Rahul Dravid) பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பயிற்சியாளராக பொறுப்பேற்க ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் அவர் பதவி ஏற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) ராகுல் டிராவிட் தலைவராக இருந்து வருகிறார். பிசிசிஐ விதிகளின் படி ஒரு நபர் இரண்டு பதவிகளில் இருக்க கூடாது என்பதால், இந்த பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலக உள்ளார்.

இதனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணை (VVS Laxman) பிசிசிஐ அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பதவியை ஏற்க விவிஎஸ் லட்சுமண் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பெங்கால் கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் விவிஎஸ் லட்சுமண் ஆலோசகராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்