“இது டி20-ங்க.. 50 ஓவர் மாதிரியா ஆடுவீங்க?!”.. ”பேசாம நான் சொல்றத செய்ங்க” ... இந்திய அணிக்கு, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானின் ‘நச்’ ஐடியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

“50 ஓவர் மேட்ச் மாதிரி டி20 விளையாடலாமா? போனது போச்சு. இனிமே நா சொல்றதுதான் சரிபட்டு வரும்” என தற்போது டி20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மண் ஒரு புது ஐடியாவை முன்வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக பாகிஸ்தான், நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுடன் சந்தித்தப் படுமோசமான தோல்வியின் காரணமாக தற்போது அரையிறுதி போட்டியில் கூட பங்கேற்க தகுதி பெறாத அணியாக தொடரைவிட்டே வெளியேறி உள்ளது இந்திய அணி. பெயரளவில் நடந்த நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள கேப்டன் கோலிக்கு சற்றே மகிழ்வான வெற்றியைக் கொடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி சந்தித்த இந்த பெரும் தோல்விக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பல காரணங்களை பல பிரபலங்களும் முன் வைத்து வருகின்றனர். இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மண் இந்திய அணிக்கு தான் அளிக்கும் யோசனை பெரிய உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விவிஎஸ் லக்‌ஷ்மண், “இந்திய அணியின் இந்த யூஏஈ சுற்றுப்பயணம் என்னவோ வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் செய்கிறது. பேட்டிங் மட்டும் இல்லாம பந்துவீச்சிலும் அஷ்வின், ஜடேஜா மாதிரியான வீரர்கள் விக்கெட் எடுக்கும் முனைப்போடு விளையாட வருவாங்க. இது அணிக்குக் கூடுதல் பலம்தான். அடுத்த டி20 உலகக்கோப்பை அதிக நேரம் இல்ல. இந்த சூழல்ல ராகுல் டிராவிட்- ரோகித் சர்மா கூட்டணி சீக்கிரமா இந்திய அணிக்கு ஒரு புது முகவரிய கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்குறேன்.

இன்னும் ஒரு வருஷம் கூட அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு முழுசா இல்ல. இன்னமும் டி20 மேட்ச் எல்லாம் 50 ஓவர் மேட்ச் மாதிரி நாம விளையாடக் கூடாது. ஆட்டத்தோட நேர்த்திய மாத்தணும். முதல்ல ஒரு சில ஓவர்களுக்காவது பந்துவீசத் தெரிந்த திறமையான பேட்ஸ்மேன்களைத் தேர்ந்தெடுக்குற பொறுப்புக்கு முக்கியத்துவம் தரணும். வெங்கடேஷ் ஐயர், சிவம் தூபே இதுக்கு சரிபட்டு வருவாங்க. இந்த ஆப்ஷன் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றா இல்லாம நிலையானதா இருந்தா அது நம்ம அணியோட கேப்டனுக்குத்தான் நல்லது. ஒரு இடக்கை பந்துவீச்சாளர் இருந்தா அவருகிட்ட ஆட்டத்தையே மாத்துவதற்கான திறன் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆனா, நம்ம அணி எந்த முடிவ எடுக்குறதா இருந்தாலும் உடனடியா செஞ்சிடணும். அப்போதான், அடுத்த டி20 வருவதற்குள்ள அணி ஒரு வழியா செட் ஆகும். அணியில இருக்குற சக வீரர்களோட நம்பிக்கைய சம்பாதிக்க முடியும்ன்னு நான் நம்புறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

CRICKET, VIRATKOHLI, KOHLI, BCCI, VVS LAKSHMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்