ரெண்டு பேரும் என்ன நெனச்சு விளையாடுனாங்கன்னே தெரியல...! 'அவங்க பேட்டிங் பண்ண விதமே அந்த மாதிரி இல்ல...' - விளாசி தள்ளிய முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது 2021ஆம் ஆண்டுக்கான ஐபில் போட்டிகள் நடைபெற்று வரும் நேரத்தில், நேற்று சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிகொண்டது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான், 'இந்த தோல்விக்கு கொல்கத்தா அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

அவர்மட்டுமல்லாது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக்க்கும் கொல்கத்தா அணி வீரர்களை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்தி அவர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், 'நேற்று கொல்கத்தா அணியினர் பேட்டிங் செய்த விதம் படுமோசமாக இருந்தது. முதலில் அணியின் கேப்டன் மோர்கன் பேசுகையில், ரஸலும், தினேஷும் முதல் போட்டியில் வெற்றி மனநிலையுடன் விளையாடினார்களோ அதேபோலத்தான் விளையாடினார்கள் என்றார்கள், ஆனால் தினேஷ் கார்த்திக், ரஸல் பேட் செய்த விதம் அந்தமாதிரி இல்லை.

என்ன நினைத்து இப்படி விளையாடினார்கள் என தெரியவில்லை. அவர்கள் போட்டியை கடைசிவரை கொண்டு சென்று, அதன்பின் வெற்றி பெறவைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள் என நினைக்கிறேன்.

ஒரு கட்டத்தில் அனைவரும் நினைத்தோம் கொல்கத்தா வெற்றி பெற போகிறது என, ஆனால் அவர்கள் போனால் போகட்டும் என ரீதியில் போட்டியை இழந்துள்ளது. ரஸல் பேட் செய்ய வந்த போது 27 பந்துகளில் 30 ரன்கள் மட்டும்தான் தேவை. மேலும் தினேஷ் கார்த்திக் கடைசிவரை பேட் செய்தும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இது வெட்கித் தலைகுனியவேண்டிய தோல்வி.

இவர்களை தவிர, சகிப் அல்ஹசன், மோர்கன், கில், ராணா ஆகியோர் நேர்மறையான எண்ணத்துடன், உள்நோக்கத்துடன்தான் பேட் செய்தனர்.

என்னை பொறுத்தவரை தொடக்க வீரர் நிதிஷ் ராணா, கில் இருவரில் ஒருவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்திருக்க வேண்டும்.

கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கும்போது, 6 ஓவர்களில் 36 ரன்களை எளிதாக அடித்துவிடலாம், சிரமப்படத் தேவையில்லை. இந்த மாதிரியான போட்டியை ஜவ்வாக இழுக்கக்கூடாது, அதிரடியாக சில ஷாட்களை ஆடி போட்டியை முடிக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா அணி தனது ரன் ரேட்டை கூட தக்கவைக்க முடியவில்லை. இந்த மாதிரியான செயல் ஒட்டுமொத்த அணி வீரர்களுக்கும், அணியின் நிறுவனருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.' என காரசாரமாக சாடியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்