"ரெய்னா'வை எடுக்கவே கூடாதுன்னு முடிவு செஞ்ச சிஎஸ்கே??.." போட்டு உடைத்த முன்னாள் வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆனாலும், கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பேசி வருவது சுரேஷ் ரெய்னாவை பற்றி தான்.

Advertising
>
Advertising

இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில், சுமார் 10 சீசன்களுக்கு மேல், சிஎஸ்கே அணிக்காக ஆடியுள்ள ரெய்னாவுக்கு, 'Mr. IPL' என்ற பெயரும் உண்டு.

இதற்கு மிக முக்கிய காரணம், முதல் ஐபிஎல் சீசனில் இருந்தே அதிக ரன்களைக் குவித்து, பல சாதனைகளையும் தொடர்ந்து ரெய்னா படைத்து வந்ததால் தான்.

அதே போல, சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு பின்னால், சுரேஷ் ரெய்னாவின் பங்கு என்பது மிகப் பெரியது. ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவை, சென்னை உள்ளிட்ட எந்த அணிகளும் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்

இதனால், 'Unsold' என்றும் ரெய்னா அறிவிக்கப்பட்டிருந்தார். பல சீனியர் வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் நிலையில், நம்பர் 1 வீரரான ரெய்னாவுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி, ரசிகர்கள் சோகத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து, தற்போதைய ஐபிஎல் தொடரின் ஹிந்தி வர்ணனையாளாராகவும் ரெய்னா களமிறங்கியுள்ளார்.

சேவாக் சொன்ன காரணம்

ஐபிஎல் போட்டில்களில் களமிறங்கவில்லை என்றாலும், ஏதாவது ஒரு வழியில் ஐபிஎல் தொடரில் ரெய்னா பங்காற்றி வருவதால், ரசிகர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில்,, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், சிஎஸ்கே அணி ரெய்னாவை எடுக்காமல் போனதற்கான காரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு 'Farewell' நடத்தி இருக்கலாம்

"நான் சுரேஷ் ரெய்னாவுக்காக மிகவும் வருத்தப்பட்டேன். சிஎஸ்கே ஜெர்சியில் பல ஆண்டுகள் ஆடியுள்ள ரெய்னா, அந்த அணிக்கு வேண்டியும் நிறைய செய்துள்ளார். இதனால், அவருக்கு 'Farewell' கிடைத்திருக்க வேண்டும் என நான் நினைத்தேன். இரண்டு கோடி ரூபாய்க்கு ரெய்னாவை வாங்கி, இரண்டு போட்டிகளில் ஆட வைத்து, அவரின் பங்களிப்புக்கு சிஎஸ்கே அணி நன்றியினை தெரிவித்திருக்கலாம்.

சிஎஸ்கே பண்ண தப்பு..

ஏலத்தில், தங்களின் வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அணியான சிஎஸ்கே, ரெய்னா விஷயத்தில் ஒரு ட்ரிக்கை இழந்து விட்டது. ஒருவேளை துபாயில் நடந்த சம்பவமும், ரெய்னா சிஎஸ்கேவை விட்டு விலகி, மீண்டும் இணைந்ததும் கூட அணியுடனான அவரின் உறவை பாதித்திருக்கலாம். ஆனால், இத்தனை ஆண்டுகள் அவரின் பங்களிப்புக்கு வேண்டி, அதை எல்லாம் மீறி, ஒரு 'Farewell'க்கு ரெய்னா தகுதி ஆனவர்.

ஏற்கனவே முடிவு பண்ணிட்டாங்க

இரண்டு கோடி என்பது மிகப் பெரிய தொகை கிடையாது. ரெய்னாவின் அடிப்படை விலை குறித்தும், சிஎஸ்கே அணி ஆலோசனை நடத்தி இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறன். அவர்கள் ரெய்னாவை எடுக்க வேண்டாம் என ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவே நான் கருதுகிறேன்" என சேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய முதல் போட்டியின் போது, சிஎஸ்கே ஜெர்சி அணிந்து கொண்டு, நான் மைதானத்தில் நடந்து சென்றிருக்க வேண்டும் என ரெய்னா ஏங்கி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SURESHRAINA, CHENNAI-SUPER-KINGS, CSK, VIRENDER SEHWAG, IPL 2022, சேவாக், சுரேஷ் ரெய்னா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்