‘இந்த அதிரடி ஆட்டத்துக்கு காரணம் அவர்தான்’.. அப்படியென்ன ‘அட்வைஸ்’ கொடுத்தார் விராட்..? இஷான் கிஷன் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறிய அறிவுரை குறித்து மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார்.
அபுதாபி மைதானத்தில் நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் (Ishan Kishan) 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 82 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய இஷான் கிஷன், ‘டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இப்படியொரு இன்னிங்ஸில் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே பாசிட்டீவாக இருந்தோம். அதனால் நாங்கள் 250-260 ரன்கள் அடிப்போம் என எதிர்பார்த்தேன். நல்ல ஃபார்மில் உள்ளபோது, மனநிலையும் சரியாக இருக்க வேண்டும்’ எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘விராட் கோலி (Virat Kohli) மற்றும் பும்ரா கொடுத்த ஆலோசனை எனக்கு பெரிதாக உதவியது. அதேபோல் ஹர்திக் பாண்ட்யாவும், க்ருணால் பாண்டாவும் பக்கபலமாக இருந்தனர். இதுதான் கற்றுக்கொள்ளும் தருணம், இங்கு நடக்கும் தவறுகளை உலகக்கோப்பை தொடரில் நடக்காமல் பார்த்துக்கொள்ள அனைவரும் அறுவுறுத்தினர். உலகக்கோப்பை தொடரின் என்னை தொடக்க வீரராக களமிறக்க முடிவெடுத்திருப்பாதாக விராட் கோலி கூறினார். அதனால் அதற்கு தயாராக இருக்குமாறு எனக்கு அவர் அறிவுரை வழங்கினார்’ என இஷான் கிஷன் கூறினார்.
முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்தில் இஷான் கிஷன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் அடுத்த சில போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் டக்அவுட்டில் சோகமாக அமர்ந்திருந்த இஷான் கிஷனை, விராட் கோலி அழைத்து அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்னைக்கு கேன் வில்லியம்சன் மட்டும் ‘அதை’ பண்ணிட்டார்னா.. மும்பை ‘ப்ளே ஆஃப்’ கனவை மறந்து விட வேண்டியதுதான்..!
- கடைசியில் மும்பையை ‘கால்குலேட்டர்’ தூக்க வச்சிட்டாங்களே KKR.. அந்த ஒரு ‘மிராக்கிள்’ நடந்தா MI ப்ளே ஆஃப் போக வாய்ப்பு இருக்கு..!
- டி20 உலகக்கோப்பை நெருங்கிட்டு இருக்கு.. வருண் மறந்துகூட அந்த ‘தப்பை’ பண்ணிரக் கூடாது.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
- VIDEO: ‘கேப்டனே இப்படி பண்ணா எப்படி’.. கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்ட கோலி.. கடுப்பான மேக்ஸ்வெல்..!
- VIDEO: அடேங்கப்பா..! வேறலெவல் கேட்ச்.. விராட் கோலியே பார்த்து வியந்துபோய்ட்டாரு..!
- ப்ளே ஆஃப் நேரத்துல திடீர்னு ‘விலகிய’ சிஎஸ்கே ஆல்ரவுண்டர்.. இப்போ என்ன பண்றது..? தீவிர ஆலோசனையில் கேப்டன் தோனி..!
- VIDEO: ‘இதெல்லாம் மன்னிக்க முடியாத தப்பு..!’ கொதித்த முன்னாள் வீரர்கள்.. போட்டியை பரபரப்பாக்கிய அம்பயரின் முடிவு..!
- போன வருசம் பஞ்சாப் டீம்ல ஆடுன மேக்ஸ்வெல் இவர் தானா..? பிரீத்தி ஜிந்தாவே ‘செம’ ஷாக் ஆகியிருப்பாங்க.. தெறிக்கும் மீம்ஸ்..!
- ‘அந்த மனுசன் மேல அப்படி என்னதாங்க கோபம்’!.. மறுபடியும் தோனியை வம்பிழுத்த கம்பீர்.. இப்போ என்ன சொன்னார் தெரியுமா..?
- VIDEO: ‘என்ன இப்படி அவுட்டாகிட்டு போறாரு’!.. டி20 உலகக்கோப்பை டீம்ல நீங்க இருக்குறது ஞாபகம் இருக்கா..? சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!