VIDEO: ‘பேட்டிங் பண்ண வேண்டாம்.. நிறுத்துங்க’!.. பால்கனியில் இருந்து கோபமாக கத்திய கோலி, ரோஹித்.. என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். அதேபோல் கேப்டன் விராட் கோலி 42 ரன்களும், ஆல்ரவுண்டர் ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 391 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். இந்திய அணியை பொறுத்தவரை முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி நேற்று தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 5 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 21 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி 20 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இதில் புஜாரா 45 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க் வுட் ஓவரில் அவுட்டாக, அதனைத் தொடர்ந்து ரஹானேவும் (61 ரன்கள்) மொயின் அலியின் ஓவரில் அவுட்டாகினார்.
இதனை அடுத்து ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் ஜடேஜா (3 ரன்) வந்த வேகத்தில் மொயின் அலியின் ஓவரில் போல்டாகி வெளியேறினார். முக்கியமான பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்டாக, 8-வது வீரராக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா களமிறங்கினார்.
அப்போது திடீரென வானில் மேகமூட்டம் காணப்பட்டதால் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டது. இதனால் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உண்டானது. ஆனாலும் போட்டி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் கடுப்பான கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, இந்திய வீரர்களை பேட்டிங் செய்ய வேண்டாம் என பால்கனியில் இருந்து கோபமாக சைகை காட்டினர். உடனே களத்தில் இருந்த இஷாந்த் ஷர்மா அம்பயரிடம் இதுகுறித்து முறையிட்டார்.
இதனை அடுத்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடம் அம்பயர்கள் கலந்து யோசித்து போட்டியை நிறுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘கண்ணாலே சிக்னல்’.. எப்படி கோலி இதை முன்னாடியே கணிச்சாரு..? ‘செம’ வைரல்..!
- VIDEO: ‘பாய் நம்பி கேளுங்க’!.. ரிஷப் பந்த் அவ்ளோ சொல்லியும் யோசித்து நின்ற கோலி.. முதல் டெஸ்ட்டில் நடந்த ருசிகரம்..!
- 'அடிச்ச அடி ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லயோ... பிசிசிஐ-க்கு கேட்டுருச்சு'!.. அவசர அவசரமாக இங்கிலாந்து புறப்படும் 3 இளம் வீரர்கள்!
- சும்மா ஒன்னும் அவர் இந்த இடத்துக்கு வந்துர்ல.. ‘நானே கண்கூடா பார்த்துருக்கேன்’.. கோலியின் அசுர வளர்ச்சிக்கு ‘இதுதான்’ காரணம்.. யுவராஜ் சொன்ன சீக்ரெட்..!
- ‘என்ன தல இப்படி சொல்லிட்டீங்க’!.. அவரை ஆஃப் பண்ற சாக்குல சைலண்ட்டா கோலிக்கு ‘ஆப்பு’ வைத்த சேவாக்..!
- ‘உங்கள வச்சுகிட்டு இந்த மனுஷன் படுற பாடு இருக்கே..!’ ரிஷப் பந்தை தொடர்ந்து ‘மற்றுமொரு’ வீரருக்கு கொரோனா.. பெரும் சிக்கலில் கேப்டன்..!
- ‘டி20 உலகக்கோப்பை’!.. ஒரு பக்கம் ரோஹித், மறுபக்கம் ராகுல்.. காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..! என்ன செய்யப் போகிறார் தவான்..?
- 'அவருக்கு பயங்கரமான அழுத்தம் இருக்கு'!.. இந்திய அணிக்கு புதிய கோச்?.. ரவி சாஸ்திரியை அலெர்ட் செய்த முன்னாள் வீரர்!
- 'சீனியர் ப்ளேயர்னு கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா?'.. ரோகித் சர்மாவுக்கு பறந்த வார்னிங்!.. அந்த தவற அவர் எப்படி செய்யலாம்?
- 'வேண்டாம் கோலி!.. அவசரப்பட்டு 'அந்த' தப்ப பண்ணிடாதீங்க!'.. டி20 உலகக் கோப்பைக்காக... கோலி எடுத்த அதிரடி முடிவு!.. முன்னாள் வீரர் கடும் எதிர்ப்பு!