கேப்டன் பதவி விலகுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன் அவசர மீட்டிங்.. வீரர்களிடம் கோலி வச்ச ‘ஒரு’ முக்கிய கோரிக்கை..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு அணி வீரர்களுக்கு விராட் கோலி வைத்த கோரிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி கேப்டவுன் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இதனை அடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படி ஒரு அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதை அறிவிப்பதற்கு 24 மணிநேரத்துக்கு முன் அணி வீரர்கள் அனைவரையும் அழைத்து அவசர மீட்டிங் ஒன்றை விராட் கோலி நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ‘நான் பதவி விலகுவதை அறிவிக்கும் முன் நீங்கள் யாரும் வெளியே சொல்லக்கூடாது. இந்த தகவலை எந்த ஒரு சமூக ஊடகம் வாயிலாகவும் பகிர வேண்டாம்’ என வீரர்களிடம் விராட் கோலி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த உரையாடலின்போது வீரர்களுக்கு சில அறிவுரைகளை விராட் கோலி வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIRATKOHLI, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்