‘பொதுவெளியில் எப்படி பேசணும்னு தோனியை பார்த்து கத்துக்கோங்க’!.. கோலியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்.. விராட் அப்படி என்ன பேசினார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பொதுவெளியில் எப்படி பேசவேண்டும் என தோனியைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என விராட் கோலியை முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில் 3-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடரையும் இந்தியா வென்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்த டி20 தொடரில்  இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இருவரும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினர். அதேபோல் சாஃப்ட் சிக்னல் அவுட் சர்ச்சை, பட்லருடன் கோலி சண்டையிட்டது போன்ற சர்ச்சைகளும் நிகழ்ந்தன.

இந்த நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, சாஃப்ட் சிக்னல் முறையில் அவுட் கொடுத்த மூன்றாம் அம்பயரின் முடிவு குறித்து பேசினார். அப்போது கே.எல்.ராகுலின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சற்று கோபமான கோலி ஒரு ஹிந்தி பாடலை குறிப்பிட்டு, ‘மக்கள் பேசுவார்கள், பேசுவதே அவர்களின் வேலை. பயனற்ற பேச்சுக்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள்’ என கூறினார். 4 டி20 போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல், மொத்தமாக 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோலியின் இந்த பேச்சுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொதுமக்கள் மற்றொரு சக குடிமகனின் விளையாட்டு குறித்து கருத்து கூறுகின்றனர். ஆனால் விராட் ரசிகர்களின் கருத்து முட்டாள்தனமானது எனக் கூறியுள்ளார். நீங்கள் சிறப்பாக ஆடும்போது அவர்கள்தான் பாராட்டுகின்றனர். அதேபோல் சொதப்பும் போது அவர்கள் விமர்சிப்பார்கள். அதனால் அதை எப்படி பொறுமையாக கையாள வேண்டும் என்பதை தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ என சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்