VIDEO: ‘உச்சக்கட்ட கோபம்’.. பெவிலியன் திரும்பும் போது விராட் கோலி செய்த செயல்.. சர்ச்சையான அம்பயர் முடிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அவுட்டான விரக்தியில் மைதானத்தில் கோவமாக பேட்டால் அடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டியில் நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணியை பொறுத்தவரை ஹர்ஷல் படேல் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 66 ரன்களும், விராட் கோலி 48 ரன்களும் எடுத்தனர். இதில் அனுஜ் ராவத்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியில் அவுட்டான பின் பேட்டை தரையில் வேகமாக சென்ற விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் மும்பை அணியின் டெவால்ட் ப்ரீவிஸ் வீசிய ஓவரில், விராட் கோலி எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் பந்து முதலில் பேட்டில் பட்டது போன்று இருந்ததால், மூன்றாம் அம்பயரிடம் விராட் கோலி ரீவியூ கேட்டார்.

அப்போது பந்து, பேட் மற்றும் அவரது கால் பேடில் ஒரே நேரத்தில் பட்டது போன்று இருந்தது. இதனால் கள அம்பயர் கொடுத்த அவுட்டையே மூன்றாம் அம்பயரும் அறிவித்தனர். இதனால் விரக்தியடைந்த விராட் கோலி பெவிலியன் திரும்பும்போதும் கோபத்தில் பேட்டை மைதானத்தில் ஓங்கி அடித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்