‘இரண்டே ரன்னில் அவுட்’... 'திரும்பவும் மோசமான காலக் கட்டம்'... 'ரன் மெஷினுக்கு என்னாச்சு'... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 19 இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட எடுக்காமல் ரன் மெஷின் கேப்டன் விராட் கோலி சொதப்பி வருவது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் நியூசிலாந்து வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 ரன்களில் பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் விராட் கோலி, புது வரவான கைல் ஜேமிசனின் பந்தில் அவுட்டானது அவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் 136 ரன்கள் எடுத்த விராட் கோலி, அதன்பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என 19 இன்னிங்ஸிசிலும் கோலியால் ஒரு சதம் கூட எடுக்க முடியவில்லை.

தற்போதைய நியூசிலாந்துச் சுற்றுப் பயணத்தில் இதுவரை விளையாடிய 8 இன்னிங்சிலும் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார்.  இதுபோல ஒரு மோசமான காலக்கட்டம் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, 2011-ல் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை விளையாடிய 24 இன்னிங்சில் ஒரு சதம் கூட எடுக்கமுடியாமல் போனது. அடுத்த மோசமான காலக்கட்டம் 2014-ல் நிகழ்ந்தது.

பிப்ரவரி முதல் அக்டோபர் வரை நடைபெற்ற 25 இன்னிங்சில் விராட் கோலி ஒரு சதமும் எடுக்கவில்லை. அரைச் சதங்களும் பெரிதாக எடுக்கவில்லை. தற்போது அதுபோல் மோசமான நிகழ்வை நோக்கி ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி நகர்ந்து வருவது கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாளில் 43 சதங்களும் எடுத்துள்ளார். இதன்மூலம் சச்சினின் 100 சதங்களைத் தாண்ட கோலியால் மட்டுமே முடியும் என்று எண்ணவைத்திருந்த நிலையில், இப்படி நடப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

VIRATKOHLI, CRICKET, IND VS NZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்