கிரவுண்ட்டுக்கு உள்ள வந்ததும் நேராக ‘நியூஸிலாந்து’ விக்கெட் கீப்பரிடம் சென்று பேசிய கோலி.. புகழும் ரசிகர்கள்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டின் கடைசி நாளில், நியூஸிலாந்து விக்கெட் கீப்பருக்கு கை கொடுத்து சில நொடிகள் விராட் கோலி பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.  இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. ஐசிசி நடத்தும் தொடர்களில், நியூஸிலாந்து அணி கோப்பையை வெல்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று போட்டி ஆரம்பத்ததும் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்த விராட் கோலி நேராக நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பிஜே வாட்லிங்-க்கு கை கொடுத்து சில நொடிகள் பேசினார். இதற்கு காரணம், பிஜே வாட்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்பு அறிவித்திருந்தார். நேற்றைய போட்டிதான் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் கடைசி போட்டி.

அதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக போட்டி தொடங்கும் முன் பிஜே வாட்லிங்கிற்கு கை கொடுத்து விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். கிரிக்கெட்டில் கோலி ஆக்ரோஷமானவராக காணப்பட்டாலும், எதிரணி வீரர்களிடம் நன்றாக பழகக்கூடியவர் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்