‘தனி ஒருவரை சார்ந்து மட்டுமே அணி இல்ல’... ‘இந்த நேரத்தை இளைஞர்கள் யூஸ் பண்ணிக்கனும்’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் கருத்து’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசீனியர் வீரர்கள் டெஸ்ட் தொடரில் இல்லையென்றாலும், அணி கண்டிப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு போட்டியை அடுத்து கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பவுள்ளார். இதேபோல இஷாந்த் சர்மாவும் அணியிலிருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா உடற்தகுதி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ‘விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர் இல்லாதது அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும். ஆனால், கிரிக்கெட் தனியொருவரை சார்ந்திருக்கும் விளையாட்டல்ல.
இந்த சூழலை பயன்படுத்தி இளம் வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். சக வீரர்கள் சிறப்பாக விளையாடினால் இந்தப் பின்னடைவைச் சமாளிக்க முடியும். கடந்த சுற்றுப் பயணத்தைவிட தற்போது இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இருப்பினும், சில மூத்த வீரர்கள் அணியில் இருக்க மாட்டார்கள் என்பது பெரும் வெற்றிடம்தான். ஆஸ்திரேலிய அணி இதை நிச்சயம் மனதில் வைத்திருக்கும்.
அணியின் முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவர் இல்லாமல் எவ்வாறு டீம் செயல்படுமோ அதுபோல நினைத்துக் கொண்டு கோலி இல்லாத சூழலில் செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் அணியின் முக்கிய பௌலராக அனில் கும்ப்ளே இருந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டபோது அவர் இல்லாமல் டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டோம். இந்திய பௌலர்கள் திறமையானவர்கள்.
எப்பேர்ப்பட்ட நெருக்கடியிலும் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர்கள். பந்தை ஸ்விங் செய்வது, சுழலில் மிரட்டுவது போன்றவற்றில் திறமையானவர்கள்’ என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். கடந்த 2018-19 ஆம் ஆண்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நடராஜனிடம் 'இத' கவனிச்சீங்களா?.. 'மேட்ச்'ல அவரு அசத்துறதுக்கு... இது தான் காரணம்!.. புகழ்ந்து தள்ளிய சக வீரர்கள்!.. சீக்ரெட்டை உடைத்த கேப்டன் கோலி!
- ‘டி20 தொடரை கைப்பற்றிய கையோடு’... ‘ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இரு வீரர்கள்’... ‘ஆனால் இதுல யாருமே இடம்பெறல’... ‘வெளியான தகவல்’...!!!
- ‘திரும்பவும் அதே தவறு’... ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது முறை’... ‘ஐசிசி எடுத்த நடவடிக்கை’...!!!
- 'பாராட்டி தள்ளிய இந்திய ஆல் ரவுண்டருக்கு’... ‘நடராஜனின் அசத்தல் ரிப்ளை’...!!!
- 'இதுதான் அன்னைக்கு எங்க குடும்பத்தை காப்பாத்துச்சு’... ‘அதனால இதை எப்பவும் நிறுத்தமாட்டோம்’... ‘நடராஜனின் தாயார் உருக்கம்’...!!!
- 'சொந்த டீம் தோத்தபோதும்'... 'நடராஜனுக்காக சந்தோஷப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்!!!'... 'நெகிழ வைத்த பதிவால்'... 'கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!!!...
- "அவரு டீமுக்கு கிடைச்ச சொத்து, அதுவும் இந்த நேரத்துல"... 'நடராஜனை வைத்து கோலி போடும் பிளான்?!!'... 'போட்டிக்குப்பின் கிடைத்த ஸ்பெஷல் பாராட்டு!!!'...
- ‘என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி’... ‘அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும்’... ‘ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர்’...!!!
- இந்த மாதிரி நேரத்துல ‘தல’ய ரொம்ப மிஸ் பண்றோம்.. நடராஜன் எடுத்த விக்கெட்டை ‘தவறவிட்ட’ கோலி.. கொஞ்சம் சீக்கிரமா கேட்டிருக்கலாம்..!
- ‘தோனிகிட்ட இருந்துதான்’... ‘அந்த வித்தைய கத்துருக்காரு’... ‘ஆல் ரவுண்டரை பாராட்டி தள்ளிய சேவாக்’...!!!