நீண்ட நாள் காத்திருப்பு.. "இந்த தடவ மிஸ்ஸே ஆகாது.." தயாராகும் கோலி?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த மறுநாளே, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி அறிவித்தார்.

Advertising
>
Advertising

திடீரென கோலி வெளியிட்ட இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

33 வயதே ஆகும் விராட் கோலி, இதற்கு முன்பு இருந்த எந்த இந்திய டெஸ்ட் கேப்டன் செய்ய முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த காலங்களில், வெளிநாட்டு மண்ணில், இந்திய டெஸ்ட் அணி, பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியதில்லை.

மன உளைச்சல்

ஆனால், கோலி தலைமையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில், பல போட்டிகளை வென்று வரலாறு படைத்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த கேப்டன், திடீரென ஓய்வு முடிவை எடுத்தது, அவரது ரசிகர்களிடையே அதிகம் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமில்லாமல், தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக, பிசிசிஐ எடுத்த சில முடிவும், கோலியை அதிகம் மன உளைச்சலுக்குள் ஆக்கியது.

கோலியின் விருப்பம்

டி 20 உலக கோப்பை தொடர் முடிவடைந்ததும், அதன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, இனிமேல் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக தலைமை தாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு கேப்டன்கள் செயல்பட வேண்டாம் எனபதால், ஒரு நாள் போட்டியிலும், கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை கேப்டனாக பிசிசிஐ நியமித்திருந்தது.

மிகப்பெரிய சர்ச்சை

தன்னிடம் இது பற்றி பிசிசிஐ தரப்பில் யாரும் கலந்துரையாடவில்லை என கோலி கூற, இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதன் காரணமாக, நெருக்கடியில் இருந்து வந்துள்ளார் விராட் கோலி. இன்னொரு பக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு சர்வதேச சதம் கூட, கோலி அடிக்கவில்லை.

முடிவின் காரணம்?

தொடர்ந்து, பல சிறப்பான இன்னிங்ஸ்களை தந்தாலும், முன்பு போல ஒரு தாக்கத்தை கோலியின் பேட்டிங்கில் காண முடிவதில்லை. இனி வரும் நாட்களில், முழு கவனத்தையும் பேட்டிங்கில் செலுத்தலாம் என்பதற்காகவும் கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அது மட்டுமில்லாமல், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், நாளை ஆரம்பமாகிறது. முற்றிலுமாக, கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, இந்த முறை பழைய ஃபார்முக்கு சதம் அடிப்பாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த முறை நடக்கும்

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மார்னே மோர்கல், கோலி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'இந்த முறை, விராட் கோலி நிச்சயம் சதமடிப்பார். கேப் டவுன் மைதானம், கோலிக்கு மிகவும் பேவரைட். அவரே அதனை பலமுறை சொல்லி இருக்கிறார். மூன்று போட்டிகளில் அவர் சதமடிக்காமல் இருப்பார் என்பது, நிச்சயம் நிகழாது.

இந்திய அணி தான் கைப்பற்றும்

அதே போல, சிறப்பாக செட் ஆகியுள்ள அணியாக தான் நான் இந்தியாவை பார்க்கிறேன். முதல் இரண்டு போட்டிகள் நடைபெறும் பார்ல் மைதானத்தில், இந்திய அணி வெற்றி பெற தான் சாதகமும், அதிக வாய்ப்பும் உள்ளது. இதனால், 2 -1 என்ற கணக்கில், இந்திய அணி தான் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றும்' என மோர்னே மார்கல் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில், இந்திய அணி கடைசியாக ஆடிய ஒரு நாள் தொடரில், 6 போட்டிகளில் 558 ரன்கள் எடுத்திருந்தார் விராட் கோலி. இதில், மூன்று சதங்கள் அடித்த கோலி, கேப் டவுன் மைதானத்தில், 160 ரன்கள் அடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, MORNE MORKEL, IND VS SA, KL RAHUL, விராட் கோலி, மோர்னே மோர்கல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்