"விராட் கோலி இப்டி தான் அவுட் ஆவாரு.." பல மணி நேரத்திற்கு முன்பே கணித்த ரசிகை.. "அப்படியே அச்சு அசலா நடந்துருக்கு"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது.

Advertising
>
Advertising

Ind vs SL: 100 ஆவது டெஸ்டில் மைல்கல் சாதனையை தொட்ட கோலி!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு இது நூறாவது டெஸ்ட் போட்டியாகும். பல முன்னாள் வீரர்கள், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்களும் கோலிக்கு தங்களின் வாழ்த்துக்களை குறிப்பிட்டிருந்தனர்.

அது மட்டுமில்லாமல், மொஹாலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியைக் காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்திய அணி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆட்டத்தினை ஆரம்பித்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

நூறாவது டெஸ்ட்

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சதம் அடிக்காமல் இருந்து வரும் கோலி, தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதத்தை  அடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் 45 ரன்களில் அவுட்டாகி, நடையைக் கட்டினார். இதனால், இரண்டாவது இன்னிங்ஸில், சதமடிப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

சரியாக கணித்த ரசிகை

இதனிடையே, கோலி இப்படி தான் அவுட் ஆவார் என்பதை சுமார் 14 மணி நேரத்திற்கு முன்பே ஒருவர் கணித்துள்ள சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு சுமார் 1 மணியளவில், அந்த ட்வீட் போடப்பட்டுள்ளது. அதில், "கோலி தன்னுடைய நூறாவது டெஸ்ட்டில், சதம் அடிக்க மாட்டார். 100 பந்துகளில் 45 ரன்கள் மட்டுமே அடிப்பார். 4 சிறப்பான கவர் ஷாட்களை அவர் அடிப்பார். கடைசியில், எம்புல்டேனியா பந்து வீச்சில் கோலி போல்ட் ஆவார். பின்னர் எப்படி அவுட்டானார் என புரியாமல், ஏமாற்றத்தில் முழித்துக் கொண்டிருப்பார்" என அந்த ட்வீட்டில் குறிப்பிடுபட்டுள்ளது.

வியந்து போன ரசிகர்கள்

அதில் கூறியுள்ளது போலவே, 45 ரன்கள் எடுத்திருந்த கோலி, எம்புல்டேனியா பந்து வீச்சில் போல்டானார். மேலும், அவுட்டான பிறகு, சற்று குழப்பத்துடன் ஒரு மாதிரி ஏமாற்றத்திலும் கோலி பார்த்துக் கொண்டே இருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல, இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூட, ட்வீட்டை பகிர்ந்து, 'Wow' என குறிப்பிட்டுள்ளார்.

நம்பி வந்த ஜோடிகளின் 2000 அந்தரங்க வீடியோ.. WiFi வடிவில் ரகசிய கேமரா .. நடுங்க வைத்த உரிமையாளர்.. சிக்கியது எப்படி?

VIRAT KOHLI, VIRAT KOHLI WICKET, MATCH, விராட் கோலி, நூறாவது டெஸ்ட், இந்திய அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்