பேருந்தில் Video Call.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்.. டக்குன்னு போனை திருப்பிய கோலி.. "அட, வீடியோ கால்'ல இருந்தது இவங்க தானா?"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | வெறுங்காலோட உணவு டெலிவரி.. அதுக்கான காரணத்த சிரிச்சுக்கிட்டே சொன்ன ஊழியர்.. "ஆனா அத கேட்டவங்க கலங்கி போய்ட்டாங்க"

இரு அணிகளும், 3 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதற்காக, இந்தியா வந்தடைந்த தென் ஆப்பிரிக்க அணி, நேற்று (28.09.2022) முதல் டி 20 போட்டியில் இந்தியாவை சந்தித்திருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, தீபக் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது.

இதன் பின்னர், இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அரை சதமடிக்க, இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி, அக்டோபர் 02 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், பேருந்தில் இருந்த கோலி, ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் செய்த விஷயம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டி 20 போட்டி குவஹாத்தியில் வைத்து நடைபெற உள்ளது. முதல் போட்டி முடிந்து மைதானத்தில் இருந்து இந்திய வீரர்கள் பேருந்தில் கிளம்பினர்.

அப்போது, அவர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் வெளியே கூடி உற்சாகத்தில் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளார். ரசிகர்கள் கூட்டத்தை பார்த்ததும் தனது போனை அப்படியே திருப்பி மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தினார்.

அனுஷ்காவை பார்த்ததும் ரசிகர்கள் இன்னும் ஆரவாரத்துடன் கத்த தொடங்கினர். இது தொடர்பான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | "அட.. இப்படி கூட Pay பண்லாமா..??".. சாலை ஓர டீ கடையில் இளைஞர் வெச்ச வைரல் போர்டு..

CRICKET, VIRAT KOHLI, ANUSHKA SHARMA, T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்