இப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது?... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு பிளைட் பிடித்த இந்திய அணி, நாளை முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் குறுகிய கால இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, '' இந்தியாவை விட 7 மணி நேரம் முன்னதாக நேர வித்தியாசம் உள்ள ஒரு இடத்துக்கு மாறுவது கொஞ்சம் கஷ்டம் தான். வருங்காலத்தில் பிசிசிஐ இதை கருத்தில் கொள்ளும் என நினைக்கிறேன். இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு டி20 போட்டியும் முக்கியமாக உள்ளது,'' என்றார்.
ஆனால் கோலியின் இந்த பேச்சுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ் நிறுவனத்துக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், '' தன்னுடைய கருத்தை சொல்ல கோலிக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டே பிசிசிஐ பயணத்திட்டங்களை தீட்டி இருக்கிறது. தீபாவளி தினத்தில் அனைத்து வீரர்களும் ஓய்வில் தான் இருந்தனர்.
தற்போதைய பயண அட்டவணை கிரிக்கெட் நிர்வாக குழுவினர் இருக்கும் போது திட்டமிடப்பட்டது. இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை? ஒருவேளை கோலிக்கு இதில் அதிருப்தி ஏதும் இருந்திருந்தால் அவர் அப்போதே இதுகுறித்து தெரிவித்து இருக்கலாம்,'' என பதிலளித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த' நாட்டுக்கு போறோம்... எங்கள 'ஞாபகம்' வச்சுக்கங்க... 'பகிரங்கமாக' சொன்ன இளம்வீரர்... ஏன்? என்ன ஆச்சு?
- அவருக்கு ‘அத’ பண்ணனும்னு ‘அவசியமே’ இல்ல... ‘ஆனாலும்’ பண்ணினாரு... நெகிழும் ‘பிரபல’ வீரர்...
- அவராகவே 'அப்படி' நினைத்து சொல்லிருக்கலாம் ... இதனால்தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை... பயிற்சியாளர் தகவல்...!
- 'அவ்ளோ' சதம் அடிச்சவர விட்டுட்டு... சின்ன பையன 'டீம்ல' எடுத்ததுக்கு... இதுதான் காரணமாம்?
- '35 பந்துகளில்'... 'ருத்ர தாண்டவம் ஆடிய பிருத்வி ஷா!'... 'நியூசிலாந்து சரண்டர்!'...
- 'அவருக்கு' பதிலா நாங்க இருக்கோம்... களத்தில் 'குதித்த' இளம்வீரர்கள்... 'உலகக்கோப்பை' தோல்விக்கு பழிதீர்க்குமா கோலி படை?
- 'ஏன் தோனி, தோனின்னு இருக்கீங்க'... 'அவர் இடத்துக்கு ஒருத்தர் வந்தாச்சு'... கொளுத்தி போட்ட பிரபல வீரர்!
- இருக்குறதுலேயே 'கம்மி' சம்பளம்... இந்த டீம் 'கேப்டனுக்கு' தான்... எவ்வளவுன்னு தெரிஞ்சா கண்டிப்பா 'ஷாக்' ஆவீங்க!
- 2003ல் 'டிராவிட்'... 2020ல் 'கே.எல்.ராகுல்'... ஸ்டம்பிங்கில் தோனியின் வேகம்... இந்திய அணிக்கு கிடைத்த 'ஜாக்பாட்'
- இந்திய அணியின் 'முக்கிய' வீரர் திடீர் விலகல்... யாரை எடுக்குறது?... தலையை பிய்த்துக் கொள்ளும் தேர்வுக்குழு!