VIDEO: ‘க்ரீஸை தொட்டு விளக்கியும் அம்பயர் கண்டுக்கவே இல்லையே’!.. கடுப்பான கேப்டன் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் குறித்து அம்பயரிடம் கோலி க்ரீஸை தொட்டுக் காண்பித்து விளக்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 108 ரன்களும் ரிஷப் பந்த் 77 ரன்களும், கேப்டன் கோலி 66 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 43.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணியைப் பொறுத்தவரை பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியின் 26-வது ஓவரின் போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை இந்திய அணியின் குல்தீப் யாதவ் ரன் அவுட் செய்தார். ஆனால் இது மூன்றாவது அம்பரிடம் ரீவியூக்கு சென்றது. அப்போது பந்து ஸ்டம்பில் படும் வேளையில், பென் ஸ்டோக்ஸ் பேட்டை க்ரீஸ் லைனில் வைத்திருந்தது போல் இருந்தது. அதனால் அம்பயர் இதை நாட் அவுட் என தெரிவித்தார்.

உடனே வேகமாக வந்த கோலி, களத்தில் நின்ற அம்பயரிடம், க்ரீஸில் கையை வைத்து ரன் அவுட்டை விளக்கினார். முதலில் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த அம்பயர், பின்னர் கோலியிடம் ஏதோ கூறினார். இதனை அடுத்து கோபத்துடன் கோலி அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அம்பயரின் இந்த ரன் அவுட் முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்