VIDEO: என்னங்க ஆச்சு ‘கிங்’ கோலிக்கு.. மறுபடியும் ரசிகர்களை ‘சோகத்தில்’ ஆழ்த்திய விராட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அடுத்த அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டுள்ளார்.

தோனிக்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான இந்திய கிரிக்கெட் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையிலான இந்திய அணி, வெளிநாட்டு மண்ணில் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. ஆனால் கோலி தலைமையிலான இந்திய அணி, ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றியதில்லை. இதுதான் அவர் மீது வைக்கப்படும் மிகப்பெரிய விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் சமீபத்தில் டி20 இந்திய அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஐசிசி கோப்பைகளை போன்றே, ஐபிஎல் கோப்பையையும் விராட் கோலி வென்றதில்லை.

கடந்த 2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்றார். இவர் தலைமையிலான பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வந்தாலும், ப்ளே ஆஃப் போன்ற முக்கியமான போட்டிகளில் கோட்டைவிட்டு விடுகிறது. இதன் காரணமாக விராட் கோலி கேப்டன் ஆன பின் ஒரு முறை கூட பெங்களூரு அணி அரையிறுதிக்கு சென்றதில்லை.

இந்த நிலையில், விராட் கோலி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆர்சிபி அணிக்காக நான் நீண்ட வருடமாக விளையாடி வருகிறேன். இந்த வருடம்தான் நான் கேப்டனாக விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர்.

ஆனால் ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் கடைசி போட்டி வரை ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள், எனது பயணம் தொடரும்’ என கோலி தெரிவித்துள்ளார். கோலியின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்