இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய அணிக்கு அடி மேல் அடி.. மேலும் ஒரு பின்னடைவு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது, ஆனால் அதற்கு முன் விராட் கோலி குறித்து ஒரு பெரிய செய்தி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | டூவீலரை டெம்போவாக பயன்படுத்தும் இளைஞர்.. வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட கமெண்ட் தான் வெயிட்டே..!

கடைசி டெஸ்டுக்கு முன்பாக இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்டில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.

விராட் கோலி இந்திய அணியுடன் தற்போது இங்கிலாந்தில் உள்ளார். அவர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவுடன் மாலத்தீவு சுற்றுலாவுக்கு பின் இந்தியா திரும்பிய பிறகு, லேசான அறிகுறிகளுடன், கோவிட்-19 தொற்று விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் தொற்று லண்டனை அடைந்த பிறகு பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் அவர் இந்த தொற்றுநோயிலிருந்து மீண்டு முழுமையான உடற்தகுதியுடன் விளையாட தயாராக உள்ளார் என சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அஸ்வின் இங்கிலாந்து செல்லவில்லை.

விராட் கோலி இப்போது தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது இங்கிலாந்தில் தினமும் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read | 126 பயணிகளுடன் விமானம் தரையிங்கும்போது கேட்ட பயங்கர சத்தம்..கொஞ்ச நேரத்துல பரவிய தீ.. பரபரப்பான ஏர்போர்ட்..!

VIRAT KOHLI, VIRAT KOHLI TESTED POSITIVE, MALDIVES VACATION TRIP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்