1205 நாள் இதுக்காக தான்பா வெயிட்டிங்.. கோலியோட 75 வது சதத்துக்கு பின்னாடி இப்டி ஒரு ஸ்பெஷல் கனெக்ஷன் வேற இருக்கா?!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் தற்போது நடைபெற்று வருகிறது.

                                                           Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய அவர்கள், முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஒரு நாள் மட்டுமே பாக்கி..

இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி, 400 ரன்களை தாண்டி சிறப்பாக ரன் சேர்த்து வருகிறது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் சுப்மன் கில் 128 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால் முதல் இன்னிங்ஸ் கூட நான்காவது நாளில் முடிவு பெறாத சூழலில் உள்ளது. இதனால், இந்த போட்டி டிராவில் முடியலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதே வேளையில், கடைசி நாளில் எதாவது அற்புதம் நடந்து போட்டியின் முடிவு கூட மாறலாம் என்றும் ரசிகர்கள் மறுபக்கம் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் வாய்ப்பு..

முன்னதாக நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners

ஆனால் அதே வேளையில் போட்டி டிரா அல்லது இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முன்னேறுவது அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

75 ஆவது சதம்

இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் தனது 28 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்த விராட் கோலி, சுமார் 1205 நாட்கள் கழித்து தற்போது சதத்தை அடித்துள்ளார். மேலும் சர்வதேச போட்டியில் அவரது 75 ஆவது சதமாகவும் இது மாறியுள்ளது.

சுனில் கவாஸ்கரை போலவே...

அது மட்டுமில்லாமல், இந்த சதத்தில் மற்றொரு ஸ்பெஷலும் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தனது சொந்த மண்ணில் 50 வது டெஸ்ட் போட்டியில் நான்காவது வீரராக களம் இறங்கி சதம் அடித்திருந்தார். அதே போல தற்போது விராட் கோலியும் சொந்த மண்ணில் 50 வது டெஸ்ட் போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கி சுனில் கவாஸ்கரை போலவே சத்தம் அடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து ஃபார்முக்கு வந்த விராட் கோலி, தற்போது டெஸ்ட் போட்டியிலும் தனது திறனை நிரூபித்துள்ளதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

VIRATKOHLI, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்