"இத்தனை வருசமாக கட்டிக்காத்து வந்த ரெக்கார்டு".. 5 வருசத்தில் முதல்முறை சறுக்கிய கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மோசமான சறுக்கலை சந்தித்துள்ளார்.

Advertising
>
Advertising

‘திடீர்னு பாதியிலே நின்ற லிப்ட்’.. நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு.. மின்விசிறியை கழற்றி பயணிகளை மீட்ட திக்திக் சம்பவம்..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேனான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 107 ரன்னுக்கு சுருண்டது.

இதனைத் தொடர்ந்து தங்களது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்  எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு அரைசதம் விளாசினர்.

இப்போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, முதல் இன்னிங்சில் 23 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 13 ரன்களிலும் எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து குறைந்த ரன்னில் அவுட்டானதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சறுக்கலை சந்தித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருந்தார். இது தற்போது முதன்முதலாக குறைந்து, 49.95 ஆக மாறியுள்ளது. இதுவரை 101 டெஸ்ட்டில் விளையாடியுள்ள விராட் கோலி 27 சதங்கள் உள்பட 8043 ரன்கள் எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ரன்னுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ரன் சராசரியை தக்க வைத்திருப்பார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘அச்சு அசலா அவர மாதிரியே..’.. ஒவ்வொரு தாய் மாமாவும் இத பார்த்தா கண் கலங்கிடுவாங்க.. நெஞ்சை உருக்கிய குடும்பம்..!

CRICKET, VIRAT KOHLI, INDIAN CRCIKET TEAM, டெஸ்ட் கிரிக்கெட், விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்