அப்படி போடு..மேக்ஸ்வெல் - வினிராமன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் செம்ம டான்ஸ் ஆடிய விராத் கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த மாதம் மார்ச் 27 அன்று ஆஸி வீரர் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை ஒரு வாரம் கொண்ட திருமண நிகழ்வுகளை உள்ளடக்கிய பாரம்பரிய ஐயங்கார் சடங்குகளின் மூலம் திருமணம் செய்து கொண்டார்.

அப்படி போடு..மேக்ஸ்வெல் - வினிராமன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் செம்ம டான்ஸ் ஆடிய விராத் கோலி!
Advertising
>
Advertising

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கொரோனா காரணமாக  திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவித்திருந்தனர். இவர்களது கல்யாண பத்திரிகை மஞ்சள் நிறத்தில் தமிழ் மொழியில்  அச்சடிக்கப்பட்டு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

virat kohli super dance at Maxwell wedding reception mumbai

கடந்த சீசனில், பெங்களூர் (RCB) அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல்லை, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக அந்த அணி தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் மேக்ஸ்வெல் - வினி ராமனுக்கு பெங்களூர் அணி நிர்வாகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில், விராத் கோலி - அனுஷ்கா சர்மா, கேப்டன் டு பிளஸ்ஸி - இமாரி விசர், தினேஷ் கார்த்திக் மற்றும் அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து நடிகை அனுஷ்கா சர்மா “பயோ பபுளுக்குள் ஒரு திருமண நிகழ்ச்சி. இப்போது யோசித்து பார்த்தால் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் பயோ பபுளுக்குள்தான் கொண்டாடி இருக்கிறோம். Bubble life” எனக் கூறி இருந்தார்.

திருமண நிகழ்வில் பெங்களூர் அணி நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் செம நடனமாடினர். இந்தி, தெலுங்கு சினிமா, பஞ்சாபி பாடல்கள் அங்கு இசைக்கப்பட்டன. இந்த பாடல்களுக்கு விராத் கோலியும் நடமாடியுள்ளார். 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்