எப்புட்றா.. இலங்கை வீரர் அடிச்ச ரிஸ்க்கான சிக்ஸ்.. கோலியே மிரண்டு போய்ட்டாரு.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய போட்டியில் குஷல் மெண்டிஸ் அடித்த சிக்ஸரை பார்த்து விராட் கோலி ஆச்சர்யப்படும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | “போச்சே.. போச்சே”... அசீம் பத்தி சீரியஸாக சொல்லவந்த விக்ரமன்.. கிச்சன்ல இருந்து GP முத்து வின் செம டைமிங்.. விழுந்து விழுந்து சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ் 😅

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை  2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கவுஹாத்தி மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர் ஃபெர்னாண்டோ சிறப்பாக ஆடி அரைசதம் எடுத்தார். மற்ற பிளேயர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அந்த அணி 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் சிராஜ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களையும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து, சேஸிங்கில் இறங்கிய இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இறுதி நேரத்தில் ராகுல் பொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற செய்தார்.

இந்த போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன் குஷல் மெண்டிஸ் அடித்த சிக்ஸர் கோலியை ஷாக் ஆக செய்தது. முதல் இன்னிங்சில் 16 ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். ஷார்ட் லெந்த்தில் வந்த பந்தை குஷல் டீப் ஃபைன் லெக்கில் சிக்சருக்கு தூக்கிவிட்டார். உடம்புக்குள் வந்த அப்பந்தை வழக்கமாக டிஃபெண்ட்சில் பேட்ஸ்மேன் அணுகுவர். ஆனால், குஷல் அதனை சிக்ஸராக மாற்ற ஃபீல்டிங்கில் நின்றிருந்த கோலி வாயில் கைவைத்தபடி அதனை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | ஊழியர்களை ₹4 கோடி செலவுல டூர் அனுப்பிய BOSS.. தலை சுத்த வைக்கும் போனஸ் தொகை.. பின்னணியில் இருக்கும் சோக கதை..!

CRICKET, VIRAT KOHLI, KUSAL MENDIS, UMRAN MALIK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்