'மிகுந்த கனத்த மனதுடன் இந்த முடிவை எடுக்கிறேன்'... 'நீண்ட கடிதத்தை வெளியிட்ட விராட் கோலி'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோலி, சதம் விளாச முடியாமல் திணறி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம், சமீப காலமாகச் சிறப்பாக இல்லை என அவர் மீது கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோலி எந்த சதத்தையும் அடிக்கவில்லை. இதுவும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படும் கோலிக்கு கேப்டன் பதவியில் இருக்கும் அழுத்தம் தான் காரணம் என கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அதிரடியாக அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் கோலி நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ''அதில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள கோலி, வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடக்கவிருக்கும் 20 ஓவர் போட்டிகளுக்குப் பின்னர், தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கோலி'' அறிவித்துள்ளார்.
கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை வகித்து அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். 45 டி20 போட்டிகளுக்குத் தலைமை ஏற்றுள்ள கோலி, அதில் 29 வெற்றிகளும், 14 தோல்விகளையும் கண்டுள்ளார். 65 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்ற கோலி, அதில் 38 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கோலி கேப்டனாகத் தொடர்வார் என்று பல தகவல்கள் வலம் வந்த நிலையில், தற்போது கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டெஸ்ட் போட்டி நிறுத்தம்'... 'ஆனா அதற்கு முன்னாடி நடந்த சம்பவம்'...'வீரர்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா'?... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட திலீப் தோஷி!
- இங்கிலாந்தை சைலண்டா சமாதானப்படுத்தும் பிசிசிஐ.. 2 ‘சூப்பர்’ ஆஃபரை வழங்கிய ஜெய் ஷா.. என்ன செய்ய போகிறது இங்கிலாந்து..?
- ‘வேறலெவல் ஐடியா’!.. முதல் மேட்சுக்கு நாங்க இப்படிதான் வர போறோம்.. ஆரம்பமே ‘அமர்களம்’ பண்ணும் ஆர்சிபி..!
- எதுக்கு தோனிக்கு ஆலோசகர் பதவி..? ‘இனிமேல் அப்படி கேட்பீங்க’.. ஒரே ஒரு பதில்தான்.. மொத்தமாக ‘ஆஃப்’ பண்ணிய கங்குலி..!
- டாஸ் போடுவதற்கு ‘90 நிமிடத்துக்கு’ முன் நிறுத்தப்பட்ட போட்டி.. அப்படி என்னதான் நடந்தது..? ஒரு வழியாக ‘மவுனம்’ கலைத்தார் கங்குலி..!
- ஒரே நைட்டுல அப்படி என்னதான் நடந்தது..? புரியாத புதிரா இருக்கே.. அஜய் ஜடேஜா சரமாரி கேள்வி.. தோனியின் காலை சுத்தும் சர்ச்சை..!
- ‘கொரோனா பரவணும்னு இருந்தா அப்பவே வந்திருக்கும்’!.. மான்செஸ்டர் டெஸ்ட் சர்ச்சை.. முதல் முறையாக வாய் திறந்த ரவி சாஸ்திரி..!
- என்னங்க சொல்றீங்க..! கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி ‘விலக’ போறாரா..? சர்ச்சைக்கு ‘முற்றுப்புள்ளி’ வைத்த பிசிசிஐ..!
- கடைசியில் ஐசிசியிடம் போன ‘மான்செஸ்டர்’ டெஸ்ட் பஞ்சாயத்து.. வேற வழியில்ல இழப்பை சரிகட்ட இங்கிலாந்துக்கு ஒரு ‘ஆஃபர்’ கொடுத்த இந்தியா..!
- 'என்ன ரூம்ல 'LIGHT OFF' ஆகவே இல்லை'!?.. விடிய விடிய தூங்கமால் இருந்த இந்திய அணி வீரர்கள்!.. அரண்டு போன தினேஷ் கார்த்திக்!