'இந்த தோல்வினால 'உலகமே முடிஞ்சிருச்சுனு' அர்த்தம் இல்ல!'... 'உச்சகட்ட ஆதங்கத்தில்'... கொட்டித் தீர்த்த 'கோலி!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, பேட்டிங்கில் ஏற்பட்ட பின்னடைவே காரணம் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தோல்வி குறித்து தெரிவித்துள்ள கோலி, இந்த போட்டியில் டாஸ் ஜெயிப்பது என்பது முக்கியமான விஷயம். டாஸில் தோற்றிருக்க கூடாது. அதே சமயம், நியூசிலாந்து அணிக்கு சவால் விடும் வகையில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. பந்து வீச்சாளர்கள் இன்னும் நேர்த்தியாக செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பேட்டிங்கில் தான் மொத்தமாக பின்னடைவு ஏற்பட்டது. மேலும், ஒரு டெஸ்ட் தோல்வியை மட்டும் வைத்து கொண்டு எங்களை மோசமான அணி என்று கூறிவிட இயலாது. இந்த தோல்வியால் உலகமே முடிந்து விட்டது போன்று நினைக்கவில்லை. பேட்டிங்கில் வெளுத்து கட்டினால் மட்டுமே பந்து வீச்சாளர்களால் எதிரணிக்கு சவால் விடுக்க முடியும். ஆனால், இந்த போட்டியில் அது நடக்கவில்லை.
என்ன தான் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்தாலும், வெளிநாடுகளில் எங்கள் ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதை ஏற்று கொள்கிறோம் என கோலி கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல், வெற்றி, தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. எதுவாயினும் அதிலிருந்து நாம் கற்பது விளையாடும் விதத்தை மட்டுமே. அந்த வகையில் நாங்கள் விளையாடும் விதங்களை கற்று கொண்டதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
தனது பேட்டிங் திறன் பற்றி குறிப்பிட்ட கோலி, நன்றாக இருக்கிறேன். நன்றாக பேட்டிங் செய்கிறேன், சில நேரங்களில் எடுக்கும் ரன்கள் பேட்டிங் திறனை பிரதிபலிக்காது என்று நினைப்பதாகத் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
'உங்க சபலத்துக்காக குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க'... 'டாக்டர் மனைவி கொலை'... அதிரவைக்கும் திருப்பம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா?’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’!
- Video: அவருக்கு போய்... இப்டி ஒரு 'கெட்ட' பேரை வாங்கிக் குடுத்துட்டீங்களே?... 'சின்னப்பையனை' விளாசும் ரசிகர்கள்!
- Video: 'கெட்ட வார்த்தை' பேசுறத எப்போ தான் விடுவாரோ?... கேப்டனுக்கு 'எதிராக' பொங்கும் ரசிகர்கள்!
- இது கண்டிப்பா ‘அவரோடது’ தான்... ‘ஃபீல்டிங்க’ பாத்தாலே தெரியல... ‘வைரலாக’ பரவும் வீடியோ...
- Video: ஆடாம, அசையாம 'அப்டியே' நில்லுங்க... 'இந்தா' வந்துறேன்... திடீரென 'தலைதெறிக்க' ஓடிய கேப்டன்... திகைத்துப்போன ரசிகர்கள்!
- Video: 'மைக்ரோ' நொடியில் ஸ்டெம்பைத் 'தகர்த்த' பந்து... உண்மையிலேயே அவுட்டா?... 'திகைத்து' நின்ற இளம்வீரர்!
- உலக லெவனுக்கு ‘எதிராக’ விளையாடும் 4 ‘இந்திய’ வீரர்கள்... ‘பாகிஸ்தானும்’ பங்கேற்கிறதா?... பிசிசிஐ அனுப்பிய ‘பட்டியல்’...
- ‘30 ஆண்டுகள்’ கழித்து ‘வரலாற்று’ சாதனை!... திணறலிலும் ‘தாக்குப்பிடித்த’ இந்திய அணியின் ‘தொடக்க’ வீரர்...
- ‘இரண்டே ரன்னில் அவுட்’... 'திரும்பவும் மோசமான காலக் கட்டம்'... 'ரன் மெஷினுக்கு என்னாச்சு'... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'!
- 13 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை முடிவுக்கு வந்தது...'அனைத்து' விதமான போட்டிகளில் இருந்தும் 'ஓய்வு' பெறுகிறேன்...பிரபல வீரர் அறிவிப்பு!