இந்த ‘ஷாக்’-ஐ கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. அவர் பேட்டிங் பிடிக்க, ‘கோலி’ சந்தோஷத்துல சிரிக்க.. இன்னைக்கு மேட்ச்ல ‘ஹைலைட்டே’ இந்த சம்பவம்தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் முடிந்த நிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸ்ஸில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்ஸை துவங்கியது. பிங்க் பாலில் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு குறைவாக இருந்தாலும் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அந்த வகையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிரடி காட்டினர்.

இதில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான மேத்யூ வடே (8), ஜோ பேர்ன்ஸ் (8) ஆகியோரை எல்.பி.டபிள்யூ மூலம் அடுத்தடுத்து சாய்த்தார். இதனை அடுத்து வந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை 1 ரன்னில் அவுட்டாகி அஸ்வின் வெளியேற்றினார். தொடர்ந்து டிராவிஸ் ஹெட் (7), கேமரூன் க்ரீன் (11) ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் (73) அரைசதம் அடித்து கடைசி வரை போராடினார். கடைசி விக்கெட்டாக ஹசில்வுட் 8 ரன்னில் வெளியேற, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 191 ரன்களில் சுருண்டது. இந்திய அணியை பொறுத்தவரை அஸ்வின் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 53 ரன்களில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி வெளியேறிய ப்ரித்வீ ஷா, இன்றைய போட்டியில் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து புஜாரா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாக்காத வகையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேட்டுடன் மைதானத்துக்கு வந்தார். கடந்த இன்னிங்ஸில் 10-வது வீரராக களமிறங்கிய பும்ரா இன்றைய போட்டியில் 3-வதாக களமிறங்கியது ரசிகர்களுக்கு சற்று இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

பும்ரா 3-வது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்வதை, கேப்டன் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு உற்சாகப்படுத்தினர். முன்னதாக ஆஸ்திரேலியா ஏ அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் பும்ரா 10-வது வீரராக களமிறங்கி 55 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்