"T20 போட்டிகளில் இனிமே விராட் கோலி விளையாடாம இருக்கணும்".. ஷோயப் அக்தரின் அட்வைஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் விராட் கோலி. சமீப ஆண்டுகளில் சதம் எடுக்காமல் இருந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் துவங்கி வரிசையாக உலகக்கோப்பை டி20 தொடர் போட்டிகளில் அதிரடி காட்டினார் கோலி. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழ்நிலையில் நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியிலும் விராட் கோலி மிகவும் குறைவான ரன்களையே எடுத்திருந்தார். இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துவந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார் கோலி.
Images are subject to © copyright to their respective owners.
அதுவும் 186 ரன்கள் குவித்து தான் ஒரு கிங் கோலி என்பதை மீண்டும் அந்த உலகிற்கு நிரூபித்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் விராட் கோலி குறித்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார்.
பீஸ்ட்
அப்போது விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய அவர்,"விராட் கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். கேப்டன் பதவியின் அழுத்தம் அவர் மீது இருந்தது, இறுதியாக, அவர் இப்போது மனதளவில் சுதந்திரமாக இருக்கிறார். இப்போது அவர் மிகுந்த கவனத்துடன் விளையாடுவார்.
Images are subject to © copyright to their respective owners.
அவர் 110 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இப்போது அவருக்கு கேப்டன் பதவி இல்லை, ஆகவே பீஸ்ட் போல் ரன்களை குவிப்பார்" என்றார்.
டெஸ்ட் போட்டிகள்
மேலும், கோலி டி20 போட்டிகளில் விளையாட கூடாது என பேசிய அக்தர்,"ஒரு கிரிக்கெட் வீரராக, என்னைக் கேட்டால், அவர் டி20 போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் உற்சாகமாக இருக்க விரும்புபவர். மாறாக டி20 போட்டிகள் அவரது ஆற்றலை வீணடிக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அவருக்கு தற்போது 34 வயது தான் ஆகிறது. நல்ல ஃபிட்டாகவும் இருக்கிறார். இன்னும் 6 - 8 வருடங்கள் அவரால் விளையாட முடியும். அதில் 30 - 50 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடினால் சுலபமாக அவரால் இன்னும் 25 சதங்களை எடுக்க முடியும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Also Read | தமிழ்-ல பட்டய கிளப்பும் ரஹானே.. ஹர்பஜனை மிஞ்சிடுவாரு போலயே.. வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..
- அது டீம் இல்ல.. குடும்பம்... CSK அணியில் விளையாடிய நாட்கள்.. ஹர்பஜன் சிங் உருக்கம்..!
- "சேம்பியன் மீண்டு வருவான்"... ரிஷப் பண்டை சந்தித்த லெஜெண்ட் யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!
- "நான் ஒருமுறை கூட CUP அடிக்கல.. ஆனா நமக்கு Fans".. தொடர் தோல்வியில் RCB மகளிர் அணி.. கோலி கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!
- "அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!
- "சிக்ஸர் பறந்ததுக்கா இப்டி?".. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரிடம் திடீர்ன்னு வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்.. அதிர்ச்சியை உண்டு பண்ணிய வீடியோ!!
- "கோலிக்கு இன்னைக்கு இருக்க பிரச்சனை சச்சினுக்கும் இருந்துச்சு".. லெஜெண்ட் டிராவிட் சொன்ன விஷயம்..!
- "மீண்டும் மீண்டுமா?".. சிவனேன்னு இருந்த வாகனை ஜாலியா சீண்டிய வாசிம் ஜாஃபர்.. வைரல் ட்வீட்!!
- 4 வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த கோலி.. "அந்த மேட்ச் முன்னாடி அவருகிட்ட அஸ்வின் சொன்ன விஷயம்".. வைரல் பின்னணி!!
- 2 வருஷம் கழிச்சு என்ட்ரி.. "அன்னைக்கி தோனி பேசும் போதே கலங்கி போய்ட்டாரு".. முதல் முறையாக மனம்திறந்த ஷேன் வாட்சன்!!