ரொம்ப முக்கியமான போட்டி.. கோலி விளையாடுவாரா..? மாட்டாரா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. கே.எல்.ராகுல் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். அதனால் 3-வது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடுவாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலிக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் விராட் கோலிக்கு பதிலாக இளம் வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த சூழலில் 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவது குறித்து நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல், ‘விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நன்றாகவே இருக்கிறார். சில நாட்களாக அவர் பில்டிங் பயிற்சியில் நன்கு ஓடினார். 3-வது டெஸ்ட்டுக்கு முன்பாக உடல் தகுதி பெற்று விடுவார் என நினைக்கிறேன்’ என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விராட் கோலி வலைப் பயிற்சியில் நன்றாக செயல்பட்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்