‘இது நாம எதிர்பார்த்த முடிவு இல்ல.. ஆனா...!’ தோல்விக்கு பின் விராட் கோலி பதிவிட்ட ட்வீட்.. ரசிகர்கள் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள ஷார்ஜா மைதானத்தில் நேற்று ஐபிஎல் (IPL) தொடரின் எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை சுனில் நரேன் 4 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ளது.

இந்த நிலையில், தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த முடிவை நாம் எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்த தொடர் முழுவதும் வீரர்கள் வெளிப்படுத்திய திறமையை நினைத்து பெருமையடைகிறேன்.

வருத்தமான முடிவுதான், ஆனாலும் நாம் எப்போதும் தலை நிமிர்ந்து இருப்போம். இதுவரை ஆதரவு அளித்த ரசிகர்கள், அணி நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி’ என விராட் கோலி பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்