ஏன் நீங்க பேட்டிங் பண்ணாம 'சூர்ய குமாருக்கு' சான்ஸ் கொடுத்தீங்க...? 'கேப்டனா இது லாஸ்ட் மேட்ச் இல்ல...' - 'காரணத்தை' கூறிய விராட் கோலி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று (08-11-2021) இந்தியா, நமீபியா அணிகள் விளையாடின.

Advertising
>
Advertising

இந்தியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டாலும், விராட் கோலிக்கு டி-20 கேப்டனாக இது கடைசி போட்டி என்பதால், இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் நமீபியா அணியில் ஒருவர் கூட பெரிய ரன்கள் அடிக்கவில்லை. அதிகபட்சமாக டேவிட் வீஸ் 26 ரன்கள் அடித்தார்.

முதலில் களமிறங்கிய ஸ்டீபன் பாரட் (21 ரன்கள்) எடுத்தார். மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் படியாக விளையாடவில்லை. எனவே, நமீபியா அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர்.

சற்று எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் 54 ரன்கள், ரோஹித் ஷர்மா 56 ரன்கள் அடித்து குவித்தனர். அணியின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் ரோஹித் சர்மா விக்கெட் ஆனார்.

அடுத்ததாக, ஒன் டவுன் வீரராக விராட் கோலி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் களம் இறங்கினார். விராட் கோலிக்கு கேப்டனாக கடைசி போட்டி என்பதால் அவரது பேட்டிங்கை காண ரசிகர்கள் மிகுந்த ஆசையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அவர் இறங்கவில்லை. சூர்யகுமார் யாதவ் அவர் பங்கிற்கு 25  ரன்கள் சேர்த்திருந்த நிலையில் இந்தியா 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது.

இந்த நிலையில், இப்போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து பேசிய விராட் கோலி, “இந்த உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் களமிறங்க சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கடைசி போட்டியிலாவது சரியான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.

எனவே தான், எனக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்தார். அணிக்காக ஏதோ ஒரு வகையில் பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதை கண்டிப்பாக சிறப்பாக செய்வேன்” என்றுக் கூறியுள்ளார்.

VIRAT KOHLI, SURYAKUMAR, THIRD PLAYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்