'நான் இனிமேல் கேப்டனா இல்லன்னாலும்...' 'அதெல்லாம்' நிறுத்த மாட்டேன்...! 'உருக்கமாக தெரிவித்த கோலி...' - கலங்கும் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 உலகக்கோப்பை போட்டியின் கடைசி விளையாட்டு முடிந்த பின் விராட் உணர்ச்சிகரமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஐசிசி டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் நேற்றைய போட்டியோடு வெளியேறியது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கேப்டனாக விளையாடும் கடைசி தொடர் இதுதான்.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நமீபியா அணி மோதியது. முதலில் களத்தில் இறங்கிய நமீபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்தது. இதில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் 136/1 ரன்களை எடுத்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் கே.எல்.ராகுல் 54 (36), ரோஹித் ஷர்மா 56 (37) அபாரமாக விளையாடினர். ரோஹித் அவுட்டான பிறகு ஒன் டவுன் வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 25 (19) சேர்த்தனர்.

இந்த தொடரில் இந்தியாவின் கடைசி போட்டி நேற்று நடந்து முடிந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அதில், 'இப்போது தான் ஒரு அழுத்தத்தில் இருந்து விடுபட்டுதாக உணர்கிறேன். கடந்த 6-7 வருடங்களாக அதிகமான பணிச்சுமை இருந்தது. இதனால், அழுத்தங்களும் அதிகமாக இருந்தது. என்னுடைய பணிச்சுமையை குறைக்க இதுதான் சரியான நேரம்.

இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்ல முடியாது எனத் தெரியும். இருந்தாலும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். உலகக்கோப்பை தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடினோம்.

ஆனால், முதல் இரண்டு போட்டிகளில், பவர் பிளேவின் இரண்டு ஓவர்களில் அடித்து விளையாடியிருந்தால், முடிவுகள் சாதகமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அணியின் பயிற்சியாளர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

நான் இப்போது இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை நிறுத்த மாட்டேன். அணிக்காக ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்' எனத் தெரிவித்தார்.

VIRATKOHLI, AGGRESSIVELY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்